லட்சுமி பெத்த அம்மாவையே என்கிட்ட அப்படி சொன்னா! மோகன் சர்மா பகீர்.. குட்டி பத்மினி வாக்குவாதம்
சென்னை: நடிகை லட்சுமிக்கு நடிகை ஐஸ்வர்யா குழந்தையாக இருக்கும் நிலையில் இன்னொரு குழந்தையை எதற்காக தத்தெடுத்தார் தெரியுமா என்று அவருடைய முன்னாள் கணவர் நடிகர் மோகன் சர்மா சில தகவல்களை சொல்ல அதற்கு நடிகை குட்டி பத்மினி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
நடிகர் மோகன் சர்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை குட்டி பத்மினியோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது நடிகை லட்சுமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மோகன் சர்மா வைத்ததால் அதற்கு குட்டி பத்மினி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் மோகன் சர்மா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக தனியார் சேனல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் நடிகை குட்டி பத்மினி தான் மோகன் சர்மாவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஏற்கனவே குட்டி பத்மினியை பலரும் ஆம்பள பயில்வான் ரங்கநாதன் என்று சொல்லி கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அது குறித்து கோபமாக கடந்த வீடியோ ஒன்றில் குட்டி பத்மினி விளக்கமும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் இப்போது அந்த வீடியோவின் ஆரம்பத்தில் மோகன் சர்மாவிடம் நீங்க லட்சுமி அக்காவை எப்படி காதலிச்சீங்க? அவங்க ரொம்ப போல்டான ஆளுன்னு எனக்கு தெரியும்.
உங்கள் இருவருக்கும் பாம்பேயில் தான் காதல் உருவானது என்றும் எனக்கு தெரியும் அந்த கதையை சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மோகன் சர்மா தானும் லட்சுமியும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது அறிமுகம் ஏற்பட்டது. பிறகு லட்சுமி மும்பைக்கு ஒரு சூட்டிங்கு வந்திருந்தபோது எனக்கு போன் பண்ணி ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லி இருந்தார். நானும் கூட்டிட்டு போயிருந்தேன். அதற்குப் பிறகு என்னிடம் அவருடைய காதலை சொன்னார்.
பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று பேசி இருந்தார். அதற்கு குட்டி பத்மினி உங்கள் இருவருக்கும் எதனால் பிரச்சனை ஏற்பட்டது என்று கேட்க, அதற்கு மோகன் சர்மா, லட்சுமி ஆரம்பத்தில் என் மீது பாசமாகத்தான் இருந்தார். நானும் திருமணத்திற்கு பிறகு அவருடைய வீட்டில் தான் இருந்தேன். ஏனென்றால் நான் இருந்த வீடு சின்ன வீடு அதில் எல்லோரும் சௌகரியமாக இருப்பதற்கு இடம் இருக்காது.

லட்சுமி அவருடைய அம்மா மற்றும் மகள் ஐஸ்வர்யாவோடு இருந்தார். அதனால் நானும் அவருடைய வீட்டில் இருந்தேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு லட்சுமிக்கும் எனக்கும் அடிக்கடி சண்டைகள் வர தொடங்கியது. லட்சுமி அவருடைய சொந்த அம்மாவையே என்னிடம் இது என்னுடைய அம்மா இல்லை என்று சொல்லி இருந்தார். அது பற்றி நான் அவருடைய அம்மாவிடம் கேட்டபோது லட்சுமியின் அம்மா ருக்மணி அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டரை கூட்டிட்டு வந்து விட்டார்.
அவர் என்னிடம் ருக்மணிக்கு பிரசவம் பார்த்தது நான் தான். லட்சுமி அவருடைய பொண்ணு தான் என்று சொல்லி இருந்தார். அது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அதற்குப் பிறகு அந்த வீட்டில் நானும் லட்சுமியும் தனித்தனி பெட்ரூமில் தான் இருந்து வந்தோம். ஒரு நாள் நான் வீட்டில் டிவியில் விளையாட்டு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஐஸ்வர்யா அழுதபடி இருந்தார்.

என்னவென்று நான் கேட்டபோது அம்மா நீங்க இல்லாத போது வேறொரு ஆணிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். எனக்கு அதைக் கேட்ட பிறகு பயங்கர கோபம் வந்துவிட்டது. அதனால் தான் நான் லட்சுமியை விட்டு பிரிந்து வந்து விட்டேன் என்று சொல்லி இருந்தார். அதற்கு குட்டி பத்மினி அந்த நேரத்தில் ஐஸ்வர்யா சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்? அம்மா தன்னை கண்டிக்கிறார் என்ற கோபத்தில் கூட அப்படி உங்களிடம் சொல்லி இருக்கலாமே? என்று சொல்ல அதற்கு மோகன் சர்மா ஐஸ்வர்யாவுக்கு அந்த நேரத்தில் 10 ,12 வயது இருக்கும்.
அப்போது லட்சுமியின் நடவடிக்கையை பார்த்து அவளுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா மீது உள்ள கோபத்தில் தான் லட்சுமி இன்னொரு குழந்தையை தத்து எடுத்தாள். ஐஸ்வர்யாவை பழிவாங்க வேண்டும் என்று அந்த குழந்தையை தத்தெடுத்ததாக அந்த நேரத்தில் லட்சுமியே ஐஸ்வர்யாவிடம் சொல்லி இருந்தார் என்று மோகன் சர்மா கூறியிருக்கிறார்.
அதற்கு குட்டி பத்மினி அப்படி பெத்த பிள்ளையே ஒரு அம்மா பலி வாங்குற அளவுக்கு அந்தப் பிள்ளை என்ன பண்ணுச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். அதோடு தன்னுடைய பிள்ளை தவறான வழியில் போய் விடக்கூடாது என்று எல்லா அம்மாவும் திட்ட தான் செய்வார்கள். அதனால் அந்த அம்மா தவறான அம்மாவாக ஆகிவிடுவார்களா? படிக்கிற வயசில் படிப்பில் மட்டும் தான் கவனத்தை செலுத்த வேண்டும் என்று அம்மா சொன்னது அந்த நேரத்தில் அந்த குழந்தைக்கு தப்பாகத் தான் தெரியும்.
அந்த கோபத்தின் உச்சத்தில் தான் லட்சுமி அக்கா இன்னொரு குழந்தையை தத்தெடுத்து இருக்கலாம். என் மீது ஒரு குழந்தை பாசம் காட்ட வேண்டும் என்று கூட அவங்க அந்த முடிவு எடுத்திருக்கலாமே என்று குட்டி பத்மினி பேசியிருக்கிறார். இப்படியாக அந்த வீடியோ இருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் நடிகை ஐஸ்வர்யா தனக்கும் தன்னுடைய அம்மாவுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. என்னை என்னுடைய அம்மா நல்லாவே பார்த்துக் கொண்டாங்க இப்போதும் நாங்கள் எல்லோரும் நல்லபடியாத பேசிக் கொண்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications