ரவீந்தரரை திடீர் திருமணம் செய்ய காரணம் இதுதான்.. வெளிப்படையாக உண்மையை சொன்ன மகாலட்சுமி
சென்னை: தற்போது சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் திடீர் திருமணம் செய்வதற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக கூறி இருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவீந்திர திருமணத்திற்கு காரணத்தை கேட்ட ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகிறார்கள்.
தல தீபாவளி விரைவில் கொண்டாட வேண்டும் என்ற ஆசைக்காக தான் ரவீந்தர் போட்ட கஷ்டமான கண்டிஷனை கூட மகாலட்சுமி ஏற்றுக்கொண்டு திடீர் திருமணத்தை செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய திருமணம்
தொகுப்பாளராக அறிமுகம் ஆகி சின்னத்திரையில் கதாநாயகி ஆகவும், வில்லியாகவும் பலரை மிரட்டி கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது எளிமையான முறையில் தனது இரண்டாவது திருமணத்தை முடித்து இருக்கிறார். சீரியல் நடிகையான மகாலட்சுமி தற்போது வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திடீர் திருமணம் செய்து கொண்டது அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன இப்படி செய்து விட்டார் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் சமூக வலைதளத்தில் தற்போது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் பற்றிய பல வதந்தி செய்திகள் கூட பரவி வருகிறதாம்.

இதுதான் காரணமாம்
சீரியல் நடிகையாக இருக்கும் மகாலட்சுமி பணத்திற்காகத்தான் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் கொஞ்சம் கூட சேரவே இல்லை என்று எல்லாம் பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி தான் எதற்காக அவசர கல்யாணம் செய்து கொண்டோம் என்ற உண்மையை கூறியிருக்கிறார். தனக்கு என்று ஆசை இருக்கிறது. அதில், தான் தல தீபாவளியை அழகாக கொண்டாட வேண்டும் என்று அதிகமாக ஆசைப்பட்டதாகவும், அதுவும் விரைவில் கொண்டாட ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காகத்தான் திடீரென்று இந்த மாதத்தில் திருமணத்தை முடித்து விட்டோம் என்று கூறி இருக்கிறார்.

இது கஷ்டமான விஷயம் தான்
ஆவணி மாதத்தில் திருமணம் செய்வதற்கு முதலில் ரவீந்தர் ஒத்துக்கொள்ளவே இல்லையாம். தீவிரமான கடவுள் பக்தி கொண்ட ரவிந்தர் புரட்டாசி மாதம் நான் வெஜ் சாப்பிட மாட்டாராம். ஆனால், மகாலட்சுமி நான்வெஜ் இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். இவர்கள் இருவருக்குள் இப்படி ஒரு பொருத்தம் இருக்கும் நிலையில் திருமணம் முடிந்தால் மகாலட்சுமியும் புரட்டாசி மாதம் நான்வெஜ் சாப்பிடக்கூடாது..அதற்கு உனக்கு ஓகே என்று சொன்னால் மட்டும்தான் நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன் என்று ரவிந்தர் கண்டிப்பாக கூறிவிட்டாராம். தல தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற ஒரே ஆசைக்காக தான் விரும்பிய நான்வெஜ் கூட இந்த புரட்டாசி மாசம் நான் சாப்பிட மாட்டேன் என்று கூறி தான் ரவீந்திரை சம்மதிக்க வைத்து திடீர் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறாராம்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் இருவரும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்துள்ளோம். ஆனால் ஒரு சிலர் மகாலட்சுமியை பற்றி பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அப்படி எந்த ஒரு அவசியமும் தங்களுக்குள் ஏற்படவில்லை காதல் மட்டும்தான் எங்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டியதே தவிர இதில் வேறு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இதை கேள்வி பார்த்த ரசிகர்கள் பலர் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications