பண மோசடி சர்ச்சையில் கணவர் ரவீந்தர்.. மனைவி "மகாலட்சுமி” செய்த செயல்.. கமெண்டில் கூட இப்படியா?
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவர் இயக்குனர் ரவீந்தரின் பிறந்த நாளுக்கு யாரும் எதிர்பார்க்காத பரிசினை அளித்திருக்கிறார்.
அதை ரவீந்தர் தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து நன்றி கூறியிருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் மீண்டும் இவர்களைப் பற்றி பரபரப்பாக பேச வைத்திருக்கிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் ரவீந்தர் மீது பண மோசடி புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைனில் கொடுத்திருந்தார்.
முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னனு தெரியுமா, நலனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் சில மாதங்களுக்கும் முன்பு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் எளிமையாக கோவிலில் வைத்து திருமணத்தை முடித்து இருந்தனர். இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது..
காரணம் மகாலட்சுமி தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயம் ஆனவர். அது போல பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். இதனாலையே இவர் திருமண புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் மீம்ஸ்கள் போட்டு இந்த ஜோடியை ட்ரெண்ட் செய்து விட்டார்கள்.

அதைத் தொடர்ந்து சில மாதங்களாகவே இவர்கள்தான் இணையத்தில் பேமஸ் ஜோடியாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர், நான் சென்னை அண்ணா நகர் பகுதியில் வீட்டுக்கு வந்தபோது கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைத்தள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வேண்டும் என்று கூறி சமூக வலைத்தள செயலி வழியாக தயாரிப்பாளர் என்னிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினேன். தொடர்ந்து இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்திரரின் நிறுவனத்திற்கு லிப்ட்ரா ப்ரோடுக்ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட ரவிந்தர் மே 25ஆம் தேதி திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார்.

ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை பணத்தை கேட்பதற்கும் கேட்டாலும் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார் என்று அதில் கூறியிருந்தார்.இந்த நிலையில் இந்த பிரச்சனை சமீபத்தில் அமைதியாக இருக்கிறது. அதே நேரத்தில் ரவீந்தரின் பிறந்தநாளில் மகாலட்சுமி தன்னுடைய கணவருக்கு இன்பப் பரிசாக ஆள் உயரத்திற்கு உள்ள போட்டோ பிரேம் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரவீந்தர் தன்னுடைய மனைவிக்கு நன்றி கூறியிருக்கிறார்.
அதோடு உங்கள் உள்ளத்திலிருந்து வரும் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் நான் அடிமை. உங்கள் உதட்டில் இருந்து வரும் வாழ்த்துக்கள் அனைத்திற்கும் என் புன்னகை என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு மகாலட்சுமி அவருடைய பதிவில், "லவ் யூ... லவ் யூ.. லாட் ஆஃப் மை ஹஸ்பேண்ட் பாய்,.." என்று கூறி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில நெட்டிசன்கள் கணவர் குறித்து வந்த சர்ச்சைகளுக்கு மகாலட்சுமி எந்த பதிலும் கொடுக்காமல் இப்போ வாழ்த்து மட்டும் கூறுகிறாரே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications