விஜயுடன் மாஸ்டர் படத்தில் கமிட் ஆனதும்! திரிஷா அனுப்பிய மெசேஜ் மறக்க முடியாது! மாளவிகா மோகனன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணை மனதார பாராட்டுவது பெரிய விஷயம். அதிலும் போட்டி, பொறாமை என்று ஆயிரம் பேச்சுகள் இருக்கும் இடத்தில் நீ ஜெயிக்கணும் என்று ஒருவர் இன்னொருவருக்கு வாழ்த்து சொல்வது இன்னும் பெரிய விஷயம். அப்படி ஒரு சம்பவத்தை தான் நடிகை மாளவிகா மோகனன் இப்போது பகிர்ந்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் பேட்டி

மாளவிகா மோகனன் சமீபத்திய பேட்டியில் நடிகர் திரிஷா பற்றி பேசும்போது, தான் தமிழில் நடித்த முதல் படம் பேட்ட, அந்த படத்தில் திரிஷாவுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்போது தனக்கு சினிமா புதிது என்பதால் செட்டில் தன்னை மிகவும் இயல்பாக வைத்திருந்ததார். என்னுடைய சூழலை புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

Malavika Mohanan

திரிஷா அனுப்பிய மெசேஜ்

அது மட்டுமல்லாமல் வார நாசியில் பேட்ட படபிடிப்பு நடந்த போது இருவரும் ஒன்றாக வெளியே சென்று வந்தோம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்ததும் எனக்கு திரிஷாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் "ஹாய் பேபி உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மிகப்பெரிய வாய்ப்புக்கு வாழ்த்துக்கள்" என்று திரிஷா கூறியிருந்தார்.

விஜயின் கேரக்டர்

அவர் இதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதை சொல்ல உண்மையில் ஒரு நல்ல மனது வேண்டும். சினிமாவில் போட்டிகள் இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் திரிஷா அப்படிப்பட்டவங்க கிடையாது என்று கூறியிருக்கிறார். அதோடு விஜய் பற்றி பேசும்போது, விஜய் சார் இன்று மக்களின் மனதில் இடம் பிடித்து நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டு. அவர் ஒன்றை சொன்னால் அதை செய்து காட்ட வேண்டும் என்று நினைப்பாரு. அது மிகவும் அழகான குணம். விஜய் சாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் என்று மாளவிகா மோகனன் கூறி இருக்கிறார்.

முதல்வர் விஜய் பேச்சு

ஏற்கனவே இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய விஜய் பெண்களை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தி பேசுவதும், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் கடுமையாக எதிர்த்திருந்தார். அரசியலில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் அரசியல் பெயரில் தனிப்பட்ட முறையில் ஒருவரை, குறிப்பாக பெண்களை இழிவு படுத்தி பேசுவது தவறு, வார்த்தைகளில் ஆபாசமாம், வெறுப்பு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் சந்தித்த அவமதிப்பை பற்றி நாங்க கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் இதுபோல இனி பெண்களைப் பற்றி யார் பேசினாலும் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார். இது சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டு வரும் சமயத்தில் இப்போது மாளவிகா மோகனன் விஜய் மற்றும் திரிஷா பற்றி பேசிய பேட்டியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+