மஞ்சுளாவின் அந்த 1 வார்த்தை.. இளையராஜா விட்டுத் தரலாமே.. நடிகை வனிதா ரொம்ப பாவம்.. குவியும் ஆதரவுகள்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள "மிஸஸ் அண்ட் மிஸ்டர்"படத்தில், 'சிவராத்திரி துாக்கம் ஏது' என, இடம் பெற்றிருக்கும் பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.. இதில், இன்னும் ஒரு வாரத்தில் வனிதா பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனினும், வனிதா மீதான ஆதரவுகள் இணையத்தில் அதிகரிக்க துவங்கி உள்ளன..
சமீபத்தில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டியொன்றில், "திருமணம் செய்து அனுப்புவதைவிட, மகள் வனிதாவை பெரிய நடிகையாக்க வேண்டும் என்றுதான் மஞ்சுளாவின் எண்ணமாக அப்போது இருந்தது.. வனிதா தரப்பில் மட்டுமே இப்படியான எண்ணம் இருந்து, அது பேச்சுவார்த்தையுடன் அப்போது முடிந்து போயிருக்கலாம்.. எதுக்கு இப்பவே கல்யாணம்? என்று மஞ்சுளாவும் சொல்லியிருக்கலாம்." என கூறியிருந்தார்.

குடும்பத்துடன் நெருக்கம்
இந்நிலையில், King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "இளையராஜா குடும்பத்துடன் இருந்திருக்கிறேன், இளையராஜா மனைவியிடம் நெருக்கமாக பழகியிருக்கிறேன்.. வீட்டு பீரோ சாவி என்னிடம் தந்து, நகையை உள்ளே வைக்க சொல்வார்கள், அந்த வீட்டுக்கே மருமகளாக போயிருக்கணும் என்றுவனிதா சொல்கிறார்..
அப்படியானால், இளையராஜா குடும்பத்துடன் நெருக்கமானவள், எனக்கு உரிமை இல்லையா? என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.. இங்குதான் வனிதாவின் அப்பாவித்தன்மை வெளிப்படுகிறது.
கண்ணீருக்கு பின்னால் வலி
பணம் என்று வந்துவிட்டால், எல்லாருமே மாறிவிடுவார்கள்.. வனிதா சொல்லும் ஜீவாம்மா இன்று இல்லை, 2 பிள்ளைகளுக்குமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்கள்.. இவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், வனிதா அப்படி சொல்லியிருக்க கூடாது.
எனினும், வனிதாவின் கண்ணீருக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது, ஒரு வலி இருப்பதாக தெரிகிறது. தைரியசாலியாக இருந்தாலும், வனிதா ஒரு இன்னசென்ட்.. பெற்றோரால் ஏமாற்றப்பட்ட பெண்.. வளர்க்க வேண்டிய நேரத்தில் சரியாக வளர்த்திருந்தால், இன்று அவரது வாழ்க்கை முறை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.. சினிமாவுக்குள் வனிதாவை கொண்டுவராமல், ஐபிஎஸ், ஐஏஎஸ், மருத்துவம் போன்று படிக்க வைத்திருக்கலாம்" என்று ஆதரவாக பேசியிருக்கிறார்.
அதேபோல, Voice of TamilNadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், வழக்கு பாய்ந்துள்ள நேரத்தில், இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியது என்பதை சொல்லணுமா? இதையெல்லாம் கேட்டு இளையராஜா பயந்திருப்பார்..
இசைநிகழ்ச்சி - பவுன்சிலர்
ஆனால், வனிதா விஜயகுமார், இளையராஜா பாட்டை பயன்படுத்துவதால் ஒன்றும்
ஆகப்போவதில்லை. பணத்தை புரட்டி போட்டு படத்தை எடுத்திருக்கிறார்.. அதுக்கு இளையராஜாவே விளம்பரம் செய்வது போலாகிவிட்டது. இதுதொடர்பாக இளையராஜா வழக்கு தொடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து.
ஒருமுறை இசை நிகழ்ச்சி நடந்தபோது, பவுன்சிலர் ஒருவர் இசைக் கலைஞர்களுக்கு தண்ணீர் கொடுக்க வந்தார்.. இதைப்பார்த்த இளையராஜா, பாடிக்கொண்டிருந்த பாடகர்களை பாதியில் நிறுத்த சொல்லிவிட்டார்.. 'நீ யார்? மேடையில் உனக்கு என்ன வேலை? பாடலை கேட்கவிடாமல் தொந்தரவு செய்றே? தாகமாக இருக்கிறதென்று அவர்கள் சொன்னால், நீ ஸ்டேஜுக்கு வர வேண்டுமா? என்றார்..
காலில் விழுந்து மன்னிப்பு
உடனே மனோ, இளையராஜா காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்லவும், அந்த பவுன்சரும் இளையராஜா காலில் விழுந்தார்.. இது எப்பேர்ப்பட்ட மனப்பக்குவம்? இது நல்ல மனநிலைமையில் உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியமா? இசை நிகழ்ச்சிக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் டிக்கெட் வாங்குகிறார்கள், மேடையில் உள்ளவர்களுக்கு தண்ணீர் வைக்கக்கூட தெரியல.. இன்னமும் காசு.. காசு.. காசு...
ஏஆர் ரஹ்மான் 2 ஆஸ்கார் வாங்கினார்.. உடனே அவரிடம், 2 ஆஸ்கார் வாங்கி என்ன பண்ண போறே? வீட்டில் கொண்டுபோய் வெச்சுக்கோ என்கிறார் இளையராஜா.. எவ்வளவு வன்மமான வார்த்தைகள் இது.
இந்த வயதில் அனைவரிடமும் இளையராஜா சுமூகமாக செல்ல வேண்டும்.. கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.. பல விஷயங்களில் தோற்றுப் போனவர் வனிதா விஜயகுமார்.. உண்மையிலேயே அவர் மிகவும் பாவம்..
வனிதாவெல்லாம் பாவம்
திருமண தோல்விகள், முரண்பாடுகள், சர்ச்சைகளில் சிக்கி அவதிப்பட்டவர்.. ஒருமுறை அவரது அம்மா மஞ்சுளா பேட்டியில், என் வயித்துல இப்படியொரு ராட்சசியா? என்று திட்டினார்.. இப்படியெல்லாம் பெற்ற பிள்ளையை வஞ்சிக்கக்கூடாது..
இளையராஜா ஒப்பற்ற கலைஞர் என்பதை மறுக்கவில்லை.. ஆனால், கொஞ்சம் பெருந்தன்மையுடன் நடக்கலாம்.. வனிதாவெல்லாம் பாவம்.. அவரது படமும் சரியா ஓடல" என்று ஆதரவாக தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications