Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meghna Raj: மறைந்த கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் கனவை நிறைவேற்றும் மேக்னா ராஜ்! சந்தோஷத்தோடு அவரே வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகை மேக்னா ராஜ், தமிழில் சிலப் படங்களில் நடித்திருந்தாலும், கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணத்துக்குப் பிறகு, அவரது வாழ்க்கை மிகப் பெரியத் திருப்புமுனையைச் சந்தித்தது. கணவரின் மறைவுக்குப் பின், திரைக்குத் திரும்புவது குறித்து அவர் எழுதிய உருக்கமான பதிவு, ரசிகர்களின் மனதை நெகிழ செய்துள்ளது.

Meghna Raj Chiranjeevi

யார் இந்த மேக்னா ராஜ்

மேக்னா ராஜ், மலையாளத் திரையுலகில் இருந்து வந்தவர். இவர் தமிழில், 'காதல் சொல்ல வந்தேன்' போன்றப் படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. கன்னடத் திரையுலகில் இவர் அதிகளவில் பிரபலமானார். இவர், கன்னட சினிமாவின் முன்னணி நடிகரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் உறவினருமான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து 2018ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையும், ஜோடியாகச் செய்யும் செயல்பாடுகளும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.

சிரஞ்சீவியின் மரணம்

ஆனால் இவர்களுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இந்த திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. 2020ஆம் ஆண்டு, சிரஞ்சீவி சர்ஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். அப்போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். இந்தச் சம்பவம் திரையுலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சர்ச்சைகள்

சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்திற்குப் பின், மேக்னா ராஜ் கடுமையான விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தார். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த வதந்திகள் மற்றும் விமர்சனங்களை அவர் மன உறுதியுடன் எதிர்கொண்டார்.

கணவரின் மரணம், குழந்தை பிறப்பு என்று பலத் துயரங்களைச் சந்தித்த பிறகு, மேக்னா ராஜ் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தனதுப் புதியப் படமான 'Iruvu Dellava Bittu' குறித்தப் பதிவில், சிரஞ்சீவி சர்ஜாவுடன் நடந்த ஒரு நெகிழ்ச்சியான உரையாடலை அவர் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் குழப்பம்

2017ஆம் ஆண்டு, தான் 3 கன்னட படங்களில் நடித்ததாகவும், அதில் ஒன்று பெரிய பட்ஜெட் படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது 'Iruvu Dellava Bittu' என்றப் படத்தில், ஒரு புதிய இயக்குநருடன், 'குழந்தைக்குத் தாயாக' நடிக்க வேண்டியிருந்தபோது, நடிப்பு வாழ்க்கையைத் தொடர்வதா வேண்டாமா என்று மேக்னா ராஜ் யோசித்துள்ளார். "அடுத்த வருடம் எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கும்போது, முன்னணி நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போது, தாயாக நடித்தால், சினிமா வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கப்படுவோமோ என்ற பயம் எனக்கு இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் ஆதரவு

மேக்னா ராஜ் குழப்பத்தில் இருந்தபோது, அவரதுக் கணவர் சிரஞ்சீவி சர்ஜா அவருக்குக் கொடுத்த தைரியம்தான், இன்று வரை அவர் கலையோடுப் பயணிக்கக் காரணமாக இருக்கிறது. "சிரு (சிரஞ்சீவி), என்னிடம் வந்து இரண்டு கேள்விகளைக் கேட்டார். 'இந்தப் பெரிய பட்ஜெட் மல்டிஸ்டார் படத்தோட லீட் யாரு?'ன்னு கேட்டார். நான் அவரிடம் நடிகர்களின் பெயரைக் கூறினேன். அப்புறம் மீண்டும் சிரிச்சுக்கிட்டே, ''Iruvu Dellava Bittu' படத்துல லீட் ரோல்ல யாரு நடிக்கிறா?'ன்னு கேட்டார்" என்று மேக்னா ராஜ் விவரித்துள்ளார்.

Meghna Raj Chiranjeevi

நம்பிக்கை கொடுத்த கணவர்

அதற்கு சிரஞ்சீவி சர்ஜா, "நீ தான் லீட் ரோலில் நடிக்கிற! இது உன்னுடைய படமா இருக்க போகுது. அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். மக்கள் அதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு நீ கவலைப்பட வேண்டாம். நீ உன்னுடைய பங்களிப்பைச் செய், மீதியை நாங்க பார்த்துக்கொள்வோம்" என்றுச் சொன்னார். அன்று ஒரு காட்சியைச் (crucial sequence) படமாக்கும்போது, சிரு மானிட்டர் அருகே அமர்ந்திருந்தார். ஷூட் முடிந்ததும் அவர் எழுந்து, "நீ இந்தப் 'குட்டிமா'வுக்காக ஸ்டேட் அவார்டு வாங்குவ" என்றுச் சொன்னாராம்.

Meghna Raj Chiranjeevi

கனவு நனவானது

2020 ஜனவரியில், எனக்கு ஸ்டேட் அவார்டு கிடைச்ச செய்தியைக் கேள்விப்பட்டதும், நான் முதலில் போன் பண்ணி பேசினது சிருதான். 'கங்கிராஜூலேஷன்ஸ் குட்டிமா, நான் சொன்னேனா நீ ஸ்டேட் அவார்டு வாங்குவ, பெரிய அளவில் வெற்றி பெறுவ!' என்று சிரு சொன்னபோது என் பயம் நீங்கிப் போனது" என்று மேக்னா ராஜ் நெகிழ்ந்துள்ளார்.

திருமண விழாவிற்காக எடுத்த பட்டுப் புடவையை விருது விழாவிற்கு அணிந்து சென்றது, கணவரின் கனவை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வெற்றியாக மேக்னா ராஜ் கருதுகிறார். இப்போது அதே பட்டுப்புடவையில் எடுத்த சில புகைப்படங்களையும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். சிரஞ்சீவியின் மரணத்துக்குப் பிறகு, அவரது குழந்தையைத் தனியாக வளர்த்து வரும் மேக்னா ராஜ், தனதுக் கணவரின் கனவுகளைத் தொடர, இப்போது துணிச்சலுடன் திரையுலகில் நுழைந்திருப்பது பாராட்டத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+