நடிகர் ராமராஜனின் ஆழ்மனதில் இருந்த ஆசை.. நள்ளிரவிலும்..! பலருக்கும் இன்ஸ்பிரேஷன்..இந்த கதை தெரியுமா?
சென்னை: நடிகர் ராமராஜன் மற்றும் நளினி காதலித்து திருமணம் செய்து தற்போது பிரிந்து இருந்தாலும் எங்களுடைய காதல் என்றும் மாறாது என்று நளினி கூறி இருக்கிறார்.
அதோடு நடிகர் ராமராஜனை தனக்கு எதற்காக பிடிக்கும்..? என்றும் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும் பேட்டி ஒன்றில் நளினி பேசியிருக்கிறார்.
அதில் தான் நடிகர் ராமராஜன் அடுத்தடுத்து பல தியேட்டர்களை வாங்குவதற்கு காரணம் மற்றும் அவருடைய சாப்பாடு குறித்தும் நளினி பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த்,கமலஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் மட்டுமின்றி அவர்களுக்கு இணையாக விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் தமிழ் சினிமாவை கலக்கி வந்த காலகட்டத்தில் தங்கள் படங்களின் பாடல்கள் மூலம் மட்டுமே அவர்களுக்கு கிலி ஏற்படுத்தியவர்கள் ராமராஜன், மோகன் போன்றவர்கள். அதிலும் ராமராஜன் மக்கள் நாயகன் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒவ்வொரு கிராமத்தின் தத்து பிள்ளையாகவே மாறிவிட்டார்.
தன்னுடைய படங்களில் பாட்டின் மூலமாகவும் கலர் கலர் பட்டு சட்டை மூலமாகவும் பட்டி தொட்டி எங்கும் பலரின் ஆதர்ஷ நாயகனாக ராமராஜன் இருந்து வந்தார்.திரைத்துறை மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக ஒழுக்கத்தை கடைப்பிடித்து வந்த நடிகர்களுள் ராமராஜனும் ஒருவர் ஆவார். அந்த காலத்தில் உடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படாத ஜென்டில்மேன் ராமராஜன்.
அவரை திருமணம் செய்து பிரிந்து இருந்தாலும் அவரை இன்னமும் காதலிப்பதாக பல பேட்டிகளில் அவரது மனைவி நடிகை நளினி சொல்லிக் கொண்டுதான் இருப்பதே அதற்கு உதாரணமாகும். சமீபத்தில் ராமராஜன் குறித்து நளினி பகிர்ந்துள்ள தகவல்கள் இவ்வளவு உயரத்தில் இருந்த நடிகரா இப்படி என்று பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராமராஜன்- நளினி திருமணம் பல போராட்டங்களை கடந்து நடைபெற்று இருந்தாலும் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கை மற்றவர்களைப் போல ஜாலியாக தான் இருந்ததாம், இருவரும் ஜோடியாக முதன் முதலில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தை தான் கிராமத்து டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறார்கள். டூரிங் டாக்கீஸில் படம் பார்ப்பது அதுதான் நளினிக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கிறது.
மிகவும் அதை என்ஜாய் பண்ண நளினி அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவம் பிடித்து போக அதன் விளைவாக ராமராஜனை சொந்தமாக மேலும் 4 டூரிங் டாக்கீஸ் வாங்க வைத்திருக்கிறார்.இரவு எத்தனை மணிக்கு படப்பிடிப்பு முடித்து வந்தாலும் வீட்டில் ரசம் சோறு மற்றும் அப்பளம் போன்றவற்றை சாப்பிடுவதையே மிகவும் விருப்பமான உணவாக சாப்பிடுவாராம் ராமராஜன்.
அதிகபட்சமாக ஆம்லெட்டை சைடிசாக சேர்த்துக் கொள்வாராம். படப்பிடிப்பு தளங்களில் விதவிதமாக உணவுகள் பரிமாறப்பட்டாலும் இரவு வீட்டிற்கு வந்து இந்த உணவை உட்கொள்வதை அவர் மிகவும் விருப்பமாக வைத்திருந்ததை ஒரு சாதாரண மனைவிக்கே உரிய காதல் பொங்க கூறியுள்ளார் நளினி.நினைத்தால் எந்த விதமான உணவு வகைகளையும் எந்த விலை கொடுத்தாலும் வாங்கி உண்ணும் நிலையில் இருந்த ராமராஜன் இப்படி சாப்பிடுவதில் சிம்பிளாக இருந்து பொண்டாட்டிக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தால் எந்த பொண்டாட்டிக்கும் பிடிக்க தானே செய்யும் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications