விவாகரத்துக்கு பிறகு ராமராஜன் பற்றி வெளிப்படையாக, உருக்கமாக பேசிய நடிகை நளினி.. காரணம் "அவர்"தானாம்
நடிகர் ராமராஜனை எனக்கு இப்போதும் பிடிக்கும் என்று நடிகை நளினி உருக்கமாக பேசியிருக்கிறார்.
சென்னை: நடிகை நளினி இப்போது நாங்கள் பிரிந்து இருந்தாலும் அவரை இப்போதும் எனக்கு பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் என்று தனது முன்னாள் கணவர் ராமராஜன் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகர் பாண்டியன் உதவியோடு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
எங்களுடைய திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வரவேற்பு தந்தார் என்று பல தகவல்களை நளினி தெரிவித்து இருக்கிறார்.

நளினியின் குடும்பம்
1980 களில் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நளினி 1987-ல் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நளினி கூட பிறந்தவர்கள் 8 பேராம். அதில் நளினி இரண்டாவது ஆக அவருடைய வீட்டில் பிறந்து இருக்கிறார். அவருடைய தந்தை நடன இயக்குனராகவும், அவருடைய தாய் நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். ரத்தத்திலேயே நடனம் இருப்பதாலோ என்னவோ இவர் திரைப்படங்களில் நடனத்தில் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தொடரும் நடிப்பு
நடிகை நளினிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து தற்போது இருவருமே திருமணம் முடிந்து அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் வெள்ளி திரையிலிருந்து சின்ன திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பான வள்ளி சீரியலிலும் இவர் கதாநாயகியின் பாட்டியாக நடித்திருப்பார். காமெடியாகவும் குணசித்திர வேடத்திலும் இவரை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பால் இப்ப வரைக்கும் உள்ள ரசிகர்களையும் இவர் கவர்ந்து கொண்டிருக்கிறார். நளினி இந்த நிலையில் 2000 ஆண்டில் இவர் நடிகர் ராமராஜனை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் ராமராஜனை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஒரு தலை காதல்
இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் நடிகை நளினி நாங்கள் பிரிந்து இருந்தாலும் இப்போதும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தனது முன்னாள் கணவர் ராமராஜன் குறித்து பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் ராமராஜன் மனைவி சொல்லே மந்திரம் என்ற படத்தில் அவர் உதவி இயக்குனராக இருந்தார். அந்த படத்தில் நளினி நடித்தபோது அவர் நளினியை ஒருதலையாக காதலித்தாராம். நளினியின் உதவியாளர் மூலமாக அவருக்கு பல கடிதங்களை கொடுத்தாராம். ஒரு கட்டத்தில் ராமராஜன் நாயகனாக நடிக்க தொடங்கினாராம். முதல் படம் சூட்டிங் செல்வதற்கு முன்பு நளினியை சந்தித்து உதவி இயக்குனராக இருந்தால்தான் பொண்ணு தர மாட்டாங்க இப்போ நான் நாயகனாக நடிக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்.

நண்பனால் திருமணம்
அப்போது அங்கு வந்த நளினியின் வீட்டினர் ராமராஜனை அடித்து விட்டார்களாம். அப்போது நளினிக்கு ராமராஜன் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் அடுத்து நளினி மலையாள சினிமாவில் நடிக்க சென்று விட்டாராம். மீண்டும் சென்னைக்கு வரவே இல்லையாம். ஒரு வருடம் கழித்து சென்னை வந்த போது ராமராஜனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது புதுமுக நடிகராக வந்த பாண்டியன் உதவியோடு நடிகை நளினியும் ராமராஜனும் திருமணம் செய்து கொண்டார்களாம்.

இப்போதும் பிடிக்குமாம்
நடிகை நளினி மற்றும் ராமராஜனின் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வரவேற்பு வைத்திருந்தாராம். ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே தெரியுமாம். குழந்தைகள் பிறந்தவுடன் ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை என்று உடன் கண்டிப்பாக பிரிந்து விடும் என்று ஜோசியத்தில் சொன்னார்களாம். அப்போது சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதால் அப்படியே பிரிந்து விட்டோம் என்றும் கல்யாணத்திற்கு பின்பு தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது. ஆனால் அவர் ரொம்பவே வெகுளியானவர். நல்ல மனிதர் அதனால் அவரை எனக்கு இப்போதும் பிடிக்கும் என்று உருக்கமாக நளினி பேசியிருக்கிறார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications