நடிகை நளினி அனுபவித்த “அமானுஷ்யம்”.. நாகர்கோவிலில் வைத்த "நடுக்கல்”.. வாழ்க்கையே மாறிவிட்டதாமே
சென்னை: நடிகை நளினி ஒரு பிரபலமாக பலருக்கும் பரிட்சயமாகி இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இப்போதும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நடந்த "அமானுஷ்ய" அனுபவங்கள் குறித்து நளினி பேசியிருக்கிறார்.
அதோடு பல வருடங்களாக தான் அனுபவித்து வந்த பிரச்சனைகளுக்கு எப்படி தனக்கு தீர்வு கிடைத்தது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்து பலருக்கும் பரீட்சையமாகி இருக்கும் நடிகை நளினி இப்போது சின்ன திரையில் முக்கியமான கேரக்டரில் பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நளினி தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் கதாநாயகிகள் பலர் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நளினி. இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் இயக்கிய உயிர் உள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான நளினி அந்த நேரத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களோடு நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்ததால் ஒரே நாளில் கூட இவர் இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். அதனால் பள்ளி படிப்பை அப்படியே விட்டு விட்டாராம். ஆனால் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய கனவில் அடிக்கடி ஒரு உருவம் இவரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பது போன்றே இவருக்கு தெரிந்திருக்கிறது. அதுவும் ஒரு கோவில் இருப்பது போன்றும், அது பக்கத்தில் ஒரு குளம் இருப்பது போன்றும், அந்த குளத்தில் ஒரு பெண் படுத்திருப்பது போன்று இருக்குமாம். அந்தப் பெண்ணுக்கு நீண்ட சுருள் சுருளான தலைமுடி இருக்குமாம்.
இவரும் இது என்னவாக இருக்கும் என்று ரொம்பவே யோசித்துக்கொண்டே இருப்பாராம். ஒரு கட்டத்தில் அவருடைய அம்மாவிடம் சொல்லி இருக்கிறார். அவருடைய அம்மாவும் அது ஏதாவது கனவாக தான் இருக்கும். பல இடங்களுக்கும் போய்க் கொண்டிருப்பதால் எங்கேயாவது நீ பயந்து இருப்பியாக இருக்கும் என்று கூறியிருந்தாராம். ஒருமுறை இவர் டிரெயினில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது இவருடைய அம்மாவிடம் மீண்டும் இதையே கூறினாராம்.
அந்த நேரத்தில் நளினியின் அம்மா பக்கத்தில் அவருடைய அம்மா இருந்தாராம். அவர் நளினி சொன்னதைக் கேட்டு சத்தமாக அழுது இருக்கிறார். அது வேறு யாருமில்லை என்னுடைய அக்கா தான் என்று சொன்னாராம். என்னுடைய அக்கா அந்த மாதிரி தான் குளத்தில் இறந்து போயிட்டாங்க. குளத்தில் குளிக்கும் போது அவங்களுக்கு வலிப்பு வந்ததால அவங்க இறந்து போயிட்டாங்க. அவங்க நளினி சொல்ற மாதிரி தான் இருப்பாங்க என்று சொன்னாராம்.
அதோடு அவங்க சின்ன வயதிலேயே இறந்துட்டாங்க என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு நாகர்கோவிலில் அந்தப் பெண் இறந்த அதே இடத்திற்கு நளினியை கூட்டிட்டு போய் இருக்காங்க. அங்கே இருந்ததை பார்த்ததும் நளினி அதிர்ச்சி ஆகிட்டாங்களாம். காரணம் அங்கு இருந்த அதே கோவில், குளம் தான் என்னுடைய கனவில் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது என்று கூறியிருக்கிறார். அதோடு அந்த இடத்தில் ஒரு "நடு கல்" வைத்து இவர்கள் சாமி கும்பிட்டார்களாம் பிறகு தான் என்னுடைய வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வந்தது என்று நளினி கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications