நடிகர் ரஜினியுடன் ஒருமுறை கூட நடிக்காதது ஏன்..? பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை நளினி
சென்னை: வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நடிகை நளினி இதுவரைக்கும் ஒரு முறை கூட நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்கவில்லையாம்.
ரஜினிகாந்துடன் தனக்கு நான்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதில் சில நாட்கள் மட்டும் நடித்துவிட்டு பிறகு நளினி விலகி விட்டாராம்.

இந்த நிலையில் அது பற்றி முதல் முறையாக நடிகை நளினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பள்ளிப்படிப்பை படிக்கும் போதே கதாநாயகியாக திரைப்படங்களில் அறிமுகமாகி சினிமாவில் உச்ச நடிகர்களோடு பல ஹிட் திரைப்படங்களில் நடித்த நளினி இப்போது சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் போன்ற பல நடிகர்களோடு ஜோடியாக நளினி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவர் ராமராஜர் உடன் காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா, என்ற மகளும் அருண் என்ற மகனும் இருக்கின்றனர். இருவருமே கல்யாணம் செய்து வெளிநாட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள்.
அதுபோல நடிகை நளினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் தான். உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்திய பெருமை டி ராஜேந்திரனுக்கு தான் சேரும். அதை தொடர்ந்து தான் நளினி பல திரைப்படங்களில் நடித்து பலருக்கும் பரிச்சயமாக மாறியிருந்தார்
இந்த நிலையில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த நளினி நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட இதுவரைக்கும் அவர் நடித்ததில்லை. ஆனால் அவரை தேடி மாவீரன், தங்க மகன், கை கொடுக்கும் கை ,தம்பிக்கு எந்த ஊரு போன்ற ரஜினியின் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இந்த எல்லா திரைப்படங்களிலும் ஆரம்பத்தில் நடித்தாராம். ஆனால் தொடராமல் நளினி விலகி இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதில் நளினி பேசிக் கொண்டிருக்கும்போது, ஆமாம் ரஜினியுடன் நாலு திரைப்படங்கள் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஷூட்டிங்கில் ஒரு சில நாட்கள் நடித்த பிறகு என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் ஆகிவிட்டது. அது என்னமோ தெரியல எனக்கு அந்த நேரத்துல பைத்தியம் பிடித்து விட்டது. என்று ஒரு குழப்பமான பதிலை சொல்லி முடித்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தான் குழந்தைத்தனமாக இருந்து வந்ததால் எந்த திரைப்பட வாய்ப்பு வந்தாலும் அதில் கதையைக் கேட்காமல் தான் நளினி நடிப்பாராம். நளினியின் திரைப்பட கதைகளை எல்லாம் அவருடைய அம்மா தான் கேட்பாராம். அவர் சரி என்று சொன்ன படத்தில் நளினி நடிப்பாராம். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் சில பிரச்சனைகள் தனக்கு அந்த இடத்தில் பிடிக்காமல் ஆகிவிட்டது என்றால் உடனே எனக்கு வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி ஓடி வந்து விடுவேன் என்று நளினி இன்னொரு பேட்டியிலும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications