நயன்தாரா விரும்பி பார்க்கும் தமிழ் சீரியல்.. ஒரு எபிசோடு மிஸ் ஆகாதாம்.. ட்ரோல் ஆகும் சீரியலுக்கு இவ்வளவு மவுசா?
சென்னை: நடிகை நயன்தாரா விரும்பி பார்க்கும் சீரியல் பற்றிய தகவல் தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி, பொதிகை, கலர்ஸ் தமிழ் என்று பல முன்னணி சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் நடிகை நயன்தாரா தமிழில் பலராலும் ட்ரோல் செய்யப்படும் ஒரு நெடும் தொடரை தான் விரும்பி பார்த்து வருவாராம். அதுவும் ஒரு எபிசோடு கூட மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவாராம்.
பொதுவாக சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும் தான் சீரியலை பார்த்து வந்தார்கள். ஆனால் இப்போது இணையத்தின் பயன்பாடு காரணமாக எந்த இடத்திலும் சீரியலை பார்க்கலாம் என்பதால் ஆண்களும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுபோல சிலர் சீரியலை விரும்பி பார்க்காவிட்டாலும் அதை ட்ரோல் செய்வதற்காக கூட பார்க்கிறார்கள்.

எதிர்பார்க்காத சம்பவம்
நினைத்து பார்க்க கூட முடியாத சம்பவங்கள் எல்லாம் சீரியலில் கதையாக வந்து கொண்டிருக்கும். மாறுவேடம் என்று சொல்லிக்கொண்டு ஒரு மருவை வைத்துக் கொண்டு ரசிகர்களை நம்ப வைத்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல சில சீரியல்களில் நடுத்தெருவில் முகம் மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் நடந்த கதையும் உண்டு. இப்படி கனவிலும் நடக்காத சம்பவங்களை சீரியலில் காட்டினாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தோடு பார்க்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.
பிரபலங்களுக்கு பிடித்த சீரியல்
அதனாலேயே ஒவ்வொரு சேனலிலும் புதியது புதியதாக சீரியல்கள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சன் டிவியில் தான் அதிகமான சீரியல்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. இப்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என்று போட்டி சேனல்களிலும் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா விரும்பி பார்க்கும் சீரியல் பற்றிய தகவல் இப்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது
நயன்தாரா பார்க்கும் சீரியல்
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று சினிமாவில் அழைக்கப்படும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தமிழ் சினிமாவில் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்து கொண்டிருக்கிறார். அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் "கயல்" சீரியலைத்தான் விரும்பி பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் ஒரு எபிசோடு விடாமல் பார்த்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது.
கயல் சீரியல் கதை
காரணம் கயல் சீரியல் தான் இணையத்தில் அதிக ட்ரோல் செய்யப்படும் சீரியல் ஆக இருக்கிறது. இந்த சீரியல் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அதுபோல இந்த சீரியலில் கதாநாயகி கயலின் தங்கை இரண்டு வருடங்களாக கர்ப்பமாக இருப்பதாகவே காட்சிகள் வந்தது. இது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

முடியாத பிரச்சனை
அது போல கயல் உடைய திருமண காட்சிகளும் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது கொண்டே இருக்கிறது. கதாநாயகி கயலுக்கு வாரத்திற்கு நாலு பிரச்சனைகள் புதியதாக வந்துவிடும். அவருடைய குடும்பத்தில் இருக்கும் எல்லாருமே புது புது பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் கயல் அதை வெற்றிகரமாக முடித்துக் கொண்டே இருக்கிறார். இந்த சீரியலை இப்போது நயன்தாரா விரும்பி பார்க்கிறார் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதாக கூறியிருந்தார். அது போல கோலங்கள் சீரியலை பார்ப்பதாக ரஜினிகாந்த் அவருடைய நண்பரிடம் சொன்னதாக இயக்குனர் திருச்செல்வம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications