சீரியலில் அட்ஜஸ்ட்மென்ட்.. கதவை சாத்திட்டு! அதுவும் அந்த நடிகையும்! சன் டிவி நடிகை நிமிஷிகா பளிச்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை நிமிஷிகா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் அவலங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எல்லா இடங்களில் இருக்கும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் சில நடிகைகள் நோ சொல்லாமல் உடன்படுகிறார்கள் என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் சில இடங்களில் ஆண்களுக்கும் இந்த கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். சிலர் இதை வெளியே சொன்னால் நமக்கு தான் பிரச்சனை என்று அந்த நேரத்தில் அதை விட்டு விடுகிறார்கள். பிறகு சில வருடங்கள் கழித்து கூட அது பற்றி பேசுகிறார்கள்.

அந்த வகையில் இப்போது சினிமா துறையில் இருக்கும் பல நடிகைகளும் தாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் அனுபவித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பாலியல் தொந்தரவுகள் பற்றி வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்த நிமிஷிகாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை இருக்கிறது என்று சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
அதில் சினிமாவில் மட்டும்தான் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை இருக்குன்னு நினைச்சுக்காதீங்க சீரியலிலும் இருக்கிறது. அதுவும் துணை கேரக்டரில் நடிக்கும் நடிகைகளிடம் சிலர் அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி கேட்கிறார்கள். ஆனால் அது அந்த சீரியலில் இயக்குனர்களுக்கு கூட தெரியாமலே நடக்கிறது. ஒரு சீரியல் எடுத்துக் கொண்டால் அந்த சீரியலின் இயக்குனர் பெரிய இயக்குனராக இருக்கும் நிலையில் அவர் பெயரை சொல்லி அவருக்கு கீழே இருக்கும் அசிஸ்டெண்ட்கள் சிலர் தவறாக நடிகைகளிடம் அப்ரோச் செய்கிறார்கள்.

ஆனால் அந்த விஷயம் சம்பந்தப்பட்ட அந்த சீரியல் இயக்குனர்களுக்கு தெரிவதே கிடையாது. நான் சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். அப்போது சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது சில அசிஸ்டன்ட் டோர் லாக் பண்ணி கொண்டு போவார்கள். அதை பார்த்து என்னடா விஷயம் என்று நான் கேட்டால் ஒன்னும் இல்லை அக்கா என்று சிரித்துக் கொண்டே போவார்கள். நமக்கு அங்கு ஏதோ நடக்கிறது என்பது தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.
அசிஸ்டன்ட்டுகள் இப்படி இருக்கிறார்கள் என்றால் சில நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று அவர்களும் நோ சொல்லாமல் உடன்படுகிறார்கள். சில பெண்கள் சிரித்து பேசி சகஜமாக ரூமுக்கு செல்வதை எல்லாம் பார்த்து இருக்கிறேன். சிலர் நோ மீன்ஸ் நோ என சொல்வதையும் அதனால் பிரச்சனைகள் வெடிப்பதையும் நானே பார்த்திருக்கிறேன். அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணிட்டு போகும் பெண்களுக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என்று நான் வேண்டிக் கொள்வேன்.

சினிமாவில் மட்டுமல்ல எந்த இடத்தில் இருந்தாலும் இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பது தவறான விஷயம். பெண்களை ஆண்கள் கார்னர் செய்து இப்படி பண்ண சொல்லக்கூடாது. அதுபோல பெண்களும் அப்படி கேட்டதும் உடனடியாக புகார் அளித்து மாட்டி விட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் கலைத்துறையும் களங்கமில்லாத துறையாக பலருக்கும் வாழ்வளிக்கும்.
இதை நம்பியே வேலை பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதால் இந்த துறையில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருப்பார்களோ என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள் என்று அந்த பேட்டியில் நிமிஷிகா பேசியிருக்கிறார். நிமிஷிகா கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்த பிறகு தமிழில் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு இப்போது புது சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications