பாண்டியன் ஸ்டோர் சீசன் 2வில் நடித்ததால் ரோட்டில் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை.. நிரோஷா ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கோமதி கேரக்டரில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் நடித்து வருவது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் அவர் நான் தெருவில் போகும்போது சிலர் தன்னிடம் உரிமையாக சொன்ன வார்த்தை குறித்து பேசி இருக்கிறார்.
அந்த வகையில் நடிகை நிரோஷா நடிகர் கமல்ஹாசன், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்கள் பலரோடு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னால் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது அதற்கு காரணம் இதுதான் என்று பல வருடங்கள் கழித்து ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

நடிகை நிரோஷா வெள்ளி திரையில் முன்னணி நடிகையாக இருந்து அவரோடு நடித்த நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புகழின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து விட்டதால் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இப்போது தொடங்கி இருக்கிறார்.
நடிகை நிரோஷா ராதிகாவின் தங்கையாக இருந்தாலும் திரை துறையில் தன்னுடைய அனுபவத்தின் காரணமாகவே திரைப்படங்களில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இப்போது கொடி கட்டி பறந்து வருகிறார். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இவருடைய காமெடியான நடிப்பு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் என்று தான் சொல்ல வேண்டும்.
அதை தொடர்ந்து தான் பிரியமான தோழி என்ற திரைப்படத்திலும் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். அதிலும் தன்னுடைய காமெடியால் கலக்கி இருப்பார். இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கோமதி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் நிரோஷா பாண்டியன் ஸ்டோர் 2 அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் இதுவரைக்கும் எத்தனையோ சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதிலெல்லாம் கிடைக்காத அனுபவம் எனக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் நடிக்கும் கேரக்டர் எனக்கு வித்தியாசமாக அமைந்திருப்பதால் பார்க்கும் ரசிகர்கள் என்னை பாராட்டி வருகிறார்கள்.
இந்த சீரியலின் கோமதியாகவே ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள். ஒருநாள் நாங்கள் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தோம் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெண் என்னிடம் வந்து "கோமதி இனி இப்படியே இருந்துகோமா... மருமக கிட்ட உன் அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடாதே.... கிட்சனை எந்த காரணம் கொண்டும் உன் மருமக தங்க மயிலுக்கு கொடுத்துவிடாதே" என்று சொன்னார். எனக்கு சிரிப்பாக இருந்தது.
என்னடா நம்ம கேரக்டரை இவ்வளவு ஆழமா ரசிக்கிறாங்க என்று நான் நினைத்தேன். அதுபோல என்னுடைய கேரக்டர் பார்த்து என்னுடைய அம்மா நீயா இப்படி எல்லாம் நடிக்கிற என்று சிரித்துக் கொள்வார் என்று அந்த பேட்டியில் நிரோஷா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications