தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா.. கழுத்தில் மஞ்சள் கயிறுடன் கதறி அழுத நிரோஷா! ஆறுதல் சொன்ன பாடகி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் நடைபெறும் பக்தி ரவுண்டில் ஹெஸ்ட்டாக கலந்து கொண்ட நடிகை நிரோஷா கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் புதியது புதியதாக தொடங்கி வருகிறது. ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்குவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இடம் பிடித்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. அதில் இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் சூப்பர் ஹிட் பாடல்களை குழந்தைகள் பாடியிருந்தனர். அதைக் கேட்டு பலரும் விஜயகாந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருந்தார்கள். விஜயகாந்தின் மகன் கெஸ்ட் ஆக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதுபோல விஜயகாந்த் நண்பர்கள், அவருடைய நடித்த சக நடிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் பக்தி ரவுண்டு நடைபெற இருக்கிறது. இதில் குழந்தைகள் ஒவ்வொரு கடவுளை பற்றியும் உருக்கமான மற்றும் உணர்வு பூர்வமான பாடல்களை பாட இருக்கிறார்கள்.
குழந்தைகள் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் போது பின்னணியில் குழந்தைகள் பாடும் கடவுள் உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. சில பாடல்களுக்கு அந்த கடவுளுக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது. அது போல தான் தற்போது வெளியான ப்ரோமோவில் "குழந்தை தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா" என்ற பாடலை பாடுகிறார்.

அப்போது அங்கு அம்மன் சிலை வைத்து சுமங்கலி பூஜை நடத்துகிறார்கள். அதில் நடிகை நிரோஷாவும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த குழந்தை பாடல் பாடுவதை கேட்டு நிரோஷா கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார். பிறகு அந்த குழந்தை பாடல் பாடி முடித்ததும் அங்கிருந்த நடுவர்கள் அந்த பாடல் பாடிய குழந்தையை பாராட்டி இருக்கிறார்கள்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நிரோஷா நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் தான். நடிகை ராதிகாவின் தங்கை. 80 காலகட்டத்தில் இறுதியிலும் 90 ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் இப்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நிரோஷா புகழின் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போதுள்ள சூழ்நிலையில் பல நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்து சில வருடங்களிலே விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆனாலும் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் கோமதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா உட்பட ஒரு சில காமெடியான சீரியல்களில் நடித்திருந்தாலும் இப்போது இவருடைய நடிப்பு திறமைக்கு மேலும் மெருகேற்றும் விதமாக கோமதி கேரக்டர் அமைந்திருக்கும் நிலையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு பூஜையில் இவர் கண்கலங்கி அழுதது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications