நான் தப்பு பண்ணிட்டேன்..சீரியல் பெயர் சொல்ல விரும்பல..இது வேணும்னு கேட்டாங்க..மனம் திறந்த நித்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நித்யா ரவீந்தர் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் பெற்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இப்போதைய சூழ்நிலையில் பலரும் பிரெஷா ஆட்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்போ 20 வருஷத்துக்கு முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் எங்கே போவாங்க என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

ஒரு சீரியலில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அவர் அதில் பல தகவல்களை கூறி இருக்கிறார்.

Actress Nithya Ravinder recently talked about her serial experiences

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நித்யா ரவீந்தர் கதாநாயகியாகவும், முன்னணி கேரக்டர்களிலும் பல பிரபலங்களின் தங்கை கேரக்டர்களும் நடித்து வந்து இப்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நித்யா ரவீந்தர் என்றால் அவருக்கு பாசிட்டிவ் கேரக்டர்தான். அவர் ஒரு அழகான பாசமான அம்மாவாகவும் இருப்பார். அதே நேரத்தில் வீட்டில் உள்ள பாசமான ஒரு கேரக்டராக தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அவருக்குள் பல திறமைகள் இருக்கிறது என்பது தன்னுடைய முகத்தில் வெளி காட்ட முடியவில்லை என்று நித்தியா கூறியிருக்கிறார்.

ஐந்து வயதிலேயே நடிப்பை தொடங்கிய நித்தியா இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் கூறி இருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியல், நம்ம வீட்டு பொண்ணு சீரியல், தாலாட்டு சீரியல், சுந்தரி சீரியல் என பல சீரியல்களிலும் இவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் சில மாதங்களாகவே இந்த சீரியலிலும் காணப்படாமல் இருக்கும் நிலையில் என்ன காரணம் என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இவர் 6 மாதங்களாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தாராம். வெளிநாட்டிற்கு தன்னுடைய பேரக்குழந்தையை பார்ப்பதற்காக சென்று விட்டாராம். அதனால் தான் நான் நடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணமும் நான் அதிகமாக சீரியல்களில் கவனத்தை செலுத்தி வருவதால் இப்போது பலரும் என்னை சீரியல் நடிகை என்ற பெயரால் முத்திரை குத்தி விட்டார்கள். அதனால் தான் எனக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

என்னுடைய வாழ்வில் நான் இந்த ஒரு கேரக்டரில் மட்டும் நடித்து இருக்கக் கூடாது என்றால், அந்த சீரியலுக்கான பெயரை நான் சொல்ல மாட்டேன். அதில் என்னை நடிப்பதற்காக கூப்பிட்டார்கள். இன்னொரு நபர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென்று விலகியதால் என்னை நடிக்க கூப்பிட்டார்கள். நாளை ஷூட்டிங் எடுத்து தர வேண்டும் என்று கூப்பிட்டதால் நான் போனேன் ஆனால் அது நெகட்டிவ் கேரக்டர் எனக்கு அது செட் ஆகவில்லை.

Actress Nithya Ravinder recently talked about her serial experiences

நான் நடிப்பதை கூட நடித்து முடித்து விட்டேன். அந்த நெகட்டிவ் கேரக்டருக்கு ஆடியோவில் என்னால் பேச முடியவில்லை, அந்த ஒரு கேரக்டர்தான் நான் நடித்ததில் தவறாக செய்துவிட்டேன் என்று எனக்கு தோன்றியது. இத்தனை வருடங்களில் எனக்கு வேறு எந்த பிரச்சனைகளும் சினிமாக்களில் இல்லாத போது நான் நடித்ததில் இந்த ஒரு சீரியலில் மட்டும் தான் நெகட்டிவாக நடித்தது தவறு என்று எனக்கு தோணுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+