கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சன் டிவி சீரியல் தம்பதி.. வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் நடித்த நடிகை நிவேதிகா அந்த சீரியலில் அவரோடு நடித்து வந்த நடிகர் சுரேந்தரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் தற்போது இந்த தம்பதி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் பல நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகை நிவேதிதா சுரேந்தர் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இதில் நிவேதிதாவிற்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அந்த திருமணம் விவாகரத்தில் முடிவடைந்ததால் காதலித்து சுரேந்தரை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த நேரத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

நடிகை நிவேதிதா தமிழில் வாணி ராணி சீரியல் மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து கல்யாணப்பரிசு, திருமகள், சுந்தரி என்று பல சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் மகராசி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர்.

அதற்குப் பிறகு மலர் சீரியலில் நிவேதிதா வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சுரேந்தரோடு அவர் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிடுவதை பார்த்ததும் இருவரும் காதலிக்கிறார்களா? ஏற்கனவே நிவேதிதாவிற்கு கல்யாணம் முடிந்து விட்டதே என்று பல்வேறு கேள்விகள் எழும்பி வந்தது.

தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு நிவேதிதா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் எனக்கு விவாகரத்தாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது நான் சுரேந்திரை தான் திருமணம் செய்ய போகிறேன்... எனக்கு புது காதல் கிடைத்திருக்கிறது இனி இந்த ஸ்பெஷலான ஒருவரோடு நான் வாழ போகிறேன். அதனால் ரசிகர்கள் புரிந்து கொண்டு எங்களை வாழ விடுங்கள் என்று கூறியிருந்தார்.

அதற்கு பிறகு இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது நிவேதிதா கர்ப்பமாக இருப்பதை போட்டோ சூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications