Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்மினி கழுத்துல தொங்கிய தாலி! நடிகர் திலகத்துக்கு மலர்ந்த காதல்? திருமணத்துக்கு முன்தினம் என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் வரும் காதல் காட்சிகளை வைத்து, சில காதல் கற்பனைகளை சொல்வார்கள்.. அதேபோல பத்மினி - சிவாஜி கணேசன் இருவருக்கும் காதல் இருந்ததாக சொல்வார்கள்.. பத்மினி வேண்டுமானால் சிவாஜியை திருமணம் செய்ய விரும்பியிருக்கலாம்.. ஆனால், சிவாஜி அதை விரும்பணுமே? தன்னுடைய வீட்டின் கவுரவத்தை முதன்மையாக பார்க்கக்கூடியவர் நடிகர் திலகம்" என்று எழுத்தாளர் மருதுமோகன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில், குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாத விஷயம் வரும்போது, தன்னிடம் மகன்களின் திருமண விஷயத்தில் கண்டிப்பு காட்டியவர் நடிகர் திலகம்.. மற்றபடி சிவாஜி, காதலுக்கு எதிரானவர் கிடையாது.

Television Actress Padmini Nadigar Thilagam

நாடக நடிகை ரத்தினமாலா

சிவாஜிக்கும் காதல் இருந்திருக்கிறது. ரத்தினமாலா என்ற நாடக நடிகையுடன் காதல் இருந்தது என்று வரலாறு உள்ளது.. அந்த காதலை சிவாஜி எங்கியுமே காட்டிக் கொள்ளவில்லை. ரத்தினமாலா ஒரு சிறந்த பாடகியும்கூட..

அந்த காதல் திருமணம் வரையும் சென்றதாகவும் பேச்சு உண்டு.. ஆனால், சமூக வரம்பு, குடும்ப கலாச்சாரம் என்றெல்லாம் வந்ததால்தான், கமலா அம்மாளை திருமணம் செய்தார்.

பத்மினியுடன் கிசுகிசு

அதேபோல, பத்மினியுடன் சிவாஜிக்கு கிசுகிசு வந்தது.. "உங்களை பத்மினியுடன் இணைத்து கிசுகிசுக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "எனக்கும் பப்பிம்மாவுக்கும் உள்ள உறவு, தெய்வீக நட்பு" என்று பளிச்சென பதில் தந்தார்.. அந்தவகையில், கஷ்டநஷ்டங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய நல்ல தோழியாக பத்மினி இருந்திருக்கிறார்.

ஒரு படத்தில், பத்மினிக்கு சிவாஜி தாலி கட்டுவதுபோல ஒரு காட்சி படமாக்கப்பட்டது.. மறுநாள் நிஜமாகவே கமலா அம்மாளுடன் சிவாஜிக்கு திருமணம் நடந்தது. ஆனால், ஷூட்டிங்கில் சிவாஜி கட்டின தாலியை பத்மினி கழட்டவில்லையாம். யாருக்கும் தெரியாமல் தன் கழுத்திலேயே கட்டி இருந்தாராம்.

தாலியை கழட்டிய பத்மினி

இந்த விஷயம், பத்மினியின் சகோதரிக்கு தெரியவர அவர் அம்மாவிடம் கூறி சொல்லி, அதற்கு பிறகே அம்மா அட்வைஸ் செய்தபிறகுதான் தாலியை கழட்டினாராம்.

ரத்தினமாலா, பத்மினி இருவரிடமும் காதல், நட்பு அல்லது அதையும் தாண்டி எதுவேண்டுமானாலும் சிவாஜிக்கு இருந்திருக்கலாம்.. பல நடிகைகளுக்கு சிவாஜி மீது காதல் வந்திருக்கலாம்..

ஆனால், குடும்ப உறவு என்று வரும்போது, தன்னுடைய மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உண்மையான நேசத்துடன் வாழ்ந்தார்.. அதற்காகவே உழைத்தார்.. யார் வாழ்க்கையையும் சிவாஜி கெடுத்தார், அழித்துவிட்டார் என்று எங்கேயுமே வரலாறு கிடையாது.. குடும்பத்தை விட்டு பிரிந்து கிடந்ததாக பல நடிகர்களை சொல்ல முடியும், ஆனால், சிவாஜியை அப்படி சொல்லவே முடியாது" என்றெல்லாம் கூறியிருந்தார்.

சினிமா நாயகிகளுடன் காதலா

இந்நிலையில், Wow Tamizha என்ற யூடியூப் சேனலுக்கு நடிகல் திலகம் பற்றி ஆய்வு செய்து நூலை எழுதிய எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. "பல நடிகைகளுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும் யாரிடமும் காதல் வயப்படவில்லை.. ஆனால் சில நடிகைகள், நடிகர் திலகத்தின் மீது காதல் வயப்பட்டிருக்கலாம்..

நாடக உலகத்தில் இருந்தபோதே, ஒரு காதல் சிவாஜிக்கு இருந்தது.. ஆனால் அதை எங்கேயுமே அவர் காட்டிக் கொள்ளவில்லை..

சினிமாவில் வரும் காதல் காட்சிகளை வைத்து, சில காதல் கற்பனைகளை சொல்வார்கள்.. அதேபோல பத்மினி - சிவாஜி இருவருக்கும் காதல் இருந்ததாக சொல்வார்கள்.. பத்மினி வேண்டுமானால் சிவாஜியை திருமணம் செய்ய விரும்பியிருக்கலாம்.. ஆனால், சிவாஜி அதை விரும்பணுமே?

சுவாமி மலையில் கமலா அம்மாளுடன் சிவாஜி கணேசனுக்கு திருமணம் நடந்தது.. இந்த திருமணத்துக்கு முன்தினம், பணம் என்ற படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. அதில், பத்மினி-சிவாஜிக்கு திருமணம் நடப்பதுபோல காட்சிகள் எடுக்கப்பட்டன.. உடனே பத்மினி, எனக்கு முதல்ல தாலி கட்டிட்டுதான், கமலா அம்மாளுக்கு சிவாஜி கணேசன் தாலி கட்டினார் என்று விளையாட்டாக எல்லாரிடமும் சொன்னாராம்.

எம்ஜிஆர் - சரோஜாதேவி

நடிகைகள் நெருக்கமாக நடித்தால்தான் காட்சிகளும் நன்றாக அமையும்.. எம்ஜிஆர், சிவாஜி இருவரிடம் சரோஜாதேவி நடிக்கும்போது நிறைய வித்தியாசங்கள் தெரியும்..

சிவாஜியிடம் கவனமாக, ஒரு கட்டுப்பாடுடன் நடிப்பார்.. காரணம், எந்த காட்சியிலும் சிவாஜிதான் நடிப்பில் தூக்கி சாப்பிடுவார்.. புதிய பறவை படத்தில் ஆஹா மெல்ல நட பாட்டில், சிவாஜிதான் மெல்லமாக நடப்பார்.. அதேபோல ஜெயலலிதாவும், சிவாஜியுடன் நடித்தபோதுதான் சிறப்பான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார்..

எம்ஜிஆருடன் நடித்தபோது வெறும் ஆட்டம், பாட்டம்தான்.. எம்ஜிஆர் இதைத்தான் விரும்புவார்.. மற்றபடி எம்ஜிஆருக்கு கவனம் முழுக்க சண்டை காட்சிகளில்தான்..

எனவே, காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தாலே நடிகைகள், நடிகர்களை காதலிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.. தன்னுடைய வீட்டின் கவுரவத்தை அதிகம் பார்ப்பார் சிவாஜி கணேசன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+