40 வருடம் ஆகிட்டு.. ஆனால்! பாக்கியராஜ் குறித்து மனைவி நடிகை பூர்ணிமா எமோஷனல்.. குவியும் கமெண்டுகள்
சென்னை: நடிகராகவும், இயக்குனராகவும் பலருக்கும் பரீட்சையமான பாக்யராஜ் பற்றி நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதாவது இன்று பூர்ணிமா பாக்யராஜுக்கு 40 வது திருமண நாள் என்பதால் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை பூர்ணிமா வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பூர்ணிமா பாக்யராஜுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் பூர்ணிமா பாக்யராஜின் மகனான சாந்தனு தன்னுடைய தந்தை மற்றும் தாயோடு எடுத்த புகைப்படங்களை வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சின்ன திரையாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்தவர்கள் ஏராளம். ஆனால் அதில் ஒரு சில பிரபலங்கள் தான் தொடர்ந்து தங்களுடைய திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு போய் கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை பூர்ணிமா மற்றும் அவருடைய கணவர் பாக்கியராஜ்.
இவர்கள் இருவருமே வெள்ளி திரையிலும் சின்னத்திரையிலும் கலக்கி இருக்கிறார்கள். அதிலும் பாக்கியராஜ் இயக்குனராகவும் திரைப்பட நடிகராகவும் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில் இன்று இந்த தம்பதியின் 40வது திருமண நாள் அதை வெகு விமர்சனமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பூர்ணிமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியராஜ் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவரைப்பற்றி ஒரு கேப்ஷனையும் கொடுத்து இருக்கிறார்.

அதாவது நான் வணங்கும், போற்றும், மதிக்கும் மனிதருடன் 40 வருடங்கள் கழித்தேன். அவரை என்னுடைய வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி என்று பூர்ணிமா கூறியிருக்கும் நிலையில் இதற்கு நடிகை ராதிகா சரத்குமார், ரோபோ சங்கரின் மகள் பிரியங்கா சங்கர், குஷ்பூ, சீரியல் நடிகர் சஞ்சீவ் மனைவியான நடிகை ப்ரீத்தி என்று பல நடிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக இவர்களுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் இவர்களுடைய அழகான காதல் குறித்து பேட்டி ஒன்றில் பூர்ணிமா பேசிய வீடியோவும் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் இயக்குனராகவும் நடிகராகவும் புகழின் உச்சத்தில் பாக்கியராஜ் இருக்கும்போது பூர்ணிமா ஒரு முறை அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்திருந்தாராம். அப்போது பூர்ணிமா இங்கிலீஷில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் பாக்யராஜ் ஒரு இயக்குனர் தானே அவருக்கு இங்கிலீஷில் சரளமாக பேச தெரியும் என்று நினைத்த பூர்ணிமா பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்கியராஜ் ஓகே சி யூ என்று இரண்டு வார்த்தையில் பேசி முடித்து விட்டாராம்.

அப்போது பாக்யராஜின் நடவடிக்கையை பார்த்து பூர்ணிமா இவர் ரொம்ப திமிர் பிடித்தவர் போல என்று மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டு போய் விட்டாராம். பிறகு டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்திற்கு கதாநாயகியை பாக்கியராஜ் தேடிக் கொண்டிருந்தாராம் அப்போதுதான் பாக்கியராஜுக்கு பூர்ணிமா நினைவு வந்திருக்கு. உடனே பூர்ணிமாவிடம் அந்த படத்தின் கதையை சொல்லப் போயிருக்கிறார்.
அப்போது பாக்யராஜை பார்த்ததும் பூர்ணிமா தன்னுடைய மனசுக்குள் இருந்த கோபத்தை கொட்டி விட்டாராம். அதாவது முதல் தடவை உங்ககிட்ட பேசும் போது ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க என்று கேட்க அதற்கு பாக்கியராஜ் நீங்க பேசிய இங்கிலீஷ் எனக்கு புரியல. அதனால உங்களை அங்கிருந்து கிளப்புவதற்காக தான் அப்படி பேசினேன் என்று சொல்ல பூர்ணிமா சிரித்திருக்கிறார்.
பிறகு அந்த டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படம் நல்ல ஒரு நட்பு இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா உயிரோடு இருந்திருக்கிறார். அப்போது பூர்ணிமாவும் பாக்யராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாராம். அதுபோல பூர்ணிமாவிற்கும் பிரவீனாவிற்கும் இன்னொரு ஒற்றுமையும் இருந்திருக்கிறது. அதாவது பிரவீனாவின் திருமண நாளும் பூர்ணிமாவின் பிறந்த நாளும் ஒரே நாள்தானாம். இந்த நிலையில் தான் பிரவீனாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு அவர் காலமாகி இருக்கிறார்.
பிறகு பாக்கியராஜ் பிரவீனா குறித்து சோகத்தில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டில் எல்லோரும் பாக்கியராஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சிட்டு இருக்காங்க. அப்போ பூர்ணிமாவை மீண்டும் சந்தித்த பாக்யராஜ்க்கு அவருடைய எளிமை பிடித்திருக்கிறது. பிறகு அவரை திருமணம் செய்யலாம் என்று நினைத்த பாக்கியராஜ் பூர்ணிமாவிடம் இது பற்றி பேச வந்திருக்கிறார். அந்த நேரத்தில் பூர்ணிமா நான் அடுத்த நாள் பாரிஸூக்கு ஒரு படப்பிடிப்புக்காக போறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு பாக்யராஜ் சரி நீங்க அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். சரி என்று கிளம்பிய பூர்ணிமா அடுத்த நாள் பாரிஸிலிருந்து பாக்யராஜுக்கு போன் பண்ணி இருக்கிறார். அப்போது பாக்யராஜ் போன் எடுக்கலையாம். அவருடைய உதவியாளர் தான் போன் எடுத்து இருக்கிறார். அந்த உதவியாளர் பாரிஸில் இருந்து பேசுகிறேன் என்று சொன்னதும் ஏதோ ரசிகையா இருக்கும் என்று நினைத்து போனை வைத்து விட்டாராம்.
பிறகு தான் பாக்கியராஜிடம் ஃபோன் வந்தது பற்றி சொல்ல பாக்கியராஜ் அவரை திட்டிவிட்டு பிறகு அந்த போன் பக்கத்திலேயே அமர்ந்து இருந்தாராம். எப்போது பூர்ணிமா பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது அடுத்த நாள் பூர்ணிமா போன் செய்ததும் பாக்கியராஜ் பேசியிருக்கிறார். அப்போது பாக்யராஜ் பூர்ணிமாவிடம் தன்னுடைய காதலை சொல்ல அதற்கு பூர்ணிமா தன்னுடைய அம்மாவிடம் பேசுங்கள் என்று சொல்லி முடித்து விட்டாராம்.
பிறகு இரண்டு குடும்பத்தினரும் பேசி அவர்களுடைய சம்மதத்தை பெற்று திருமணம் முடித்து இருப்பதாக அந்த வீடியோவில் பூர்ணிமா பேசியிருக்கிறார். அதுபோல பூர்ணிமா மற்றும் பாக்யராஜின் திருமணத்தில் நடிகர் சிவாஜி, நடிகர் எம் ஜி ஆர் போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை இன்று பூர்ணிமா இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications