நீ என்ன “அந்த” நடிகையா? பிரபல இயக்குனர் கேட்ட கேள்வி.. பூர்ணிமா பாக்கியராஜ் எடுத்த முக்கிய முடிவு
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தான் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த பிரச்சனை குறித்து பிரபல சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தான் முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த திரைப்பட இயக்குனர் தன்னை நீ என்ன ஹேமமாலினி என்று நினைத்துக்கொண்டு இருக்கியா என்று தன்னை பற்றி மோசமாக திட்டியதை குறித்து பேசி இருக்கிறார்.
அந்த இயக்குனர் தன்னைத் திட்டியதற்கு என்ன காரணம் என்றும் அதோடு அந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாளில் நடந்தது என்றும் பூர்ணிமா பாக்கியராஜ் எமோஷனலாக பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் குணசித்திர நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அதுவும் இவர் 1980 முதல் 85 வரை முக்கியமாக பல திரைப்படங்களில் கதாநாயக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.
அதுபோல பூர்ணிமா பாக்கியராஜ் தமிழில் நெஞ்சில் ஒரு முள் என்ற திரைப்படத்தில் மூலமாக அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு கிழிஞ்சல்கள், தீராத விளையாட்டு பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, தாய் மூகாம்பிகை, டார்லிங் டார்லிங் டார்லிங் என பல படங்களில் நடித்திருந்தார். அதுபோல அவர் மலையாளத்தில் மோகன்லால் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி இருந்தார்.
அதுபோல தெலுங்கில் மந்திரிகரி வியக்குடு என்ற திரைப்படத்திலும் ஹிந்தியில் பஹோலி என்ற திரைப்படத்தின் மூலமாகவும் அறிமுகம் ஆகி இருந்தார். அதோடு பூர்ணிமா பாக்கியராஜ் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஆராரோ ஆரிராரோ, அம்மா வந்தாச்சு, சுந்தரகாண்டம், வேட்டியை மடிச்சு கட்டு போன்ற திரைப்படங்களை இவர் தான் தயாரித்திருக்கிறார்.
இதோடு விட்டுவிடாமல் கண்மணி, சூரிய வம்சம், எங்க வீட்டு மீனாட்சி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமாவில் ஆரம்பகாலம் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் சினிமாவில் ஆரம்பமான முதல் திரைப்பட அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்த திரைப்படத்தில் நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தை இயக்குனது இயக்குனர் பாசில் என்பவர் தான்.
ஒரு நாள் எனக்கு பிறந்தநாள், என்னுடைய பிறந்தநாள் எங்க வீட்டில் எப்போதுமே ஸ்பெஷல் ஆக கொண்டாடுவாங்க. ஏன்னா என்னுடைய பிறந்த நாளும் என் அண்ணனுடைய பிறந்த நாளும் ஒரே நாள்தான். அந்த நாளில் என்னை யாராவது கடுமையாக பேசினால் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுபோல என்னுடைய பிறந்தநாளில் எல்லா நண்பர்களும் எனக்கு நினைவு வைத்து வாழ்த்துக்கள் சொல்வாங்க. இப்ப இருக்கிற மாதிரி எல்லாம் அப்போ போன் வசதி இல்லை.
ஆனாலும் ட்ரங்க் கால் போட்டு வைத்து எனக்காக போன் பண்ணி வாழ்த்துக்கள் சொல்லுவாங்க. பலர் கடிதங்கள் மூலமாக வாழ்த்துக்கள் சொல்லுவாங்க. அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படி தான் அந்த பிறந்த நாளில் எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்ததில் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நானும் சூட்டிங் லேட்டாக போய் விட்டேன்.
அப்போ அங்கிருந்து இயக்குனர் பாசில் என்னை பார்த்து கடுமையாக திட்டிவிட்டார். அதிலும் நீ என்ன நடிகை ஹேமமாலினின்னு நினைச்சுகிட்டு இருக்கியா? முதல் படத்திலிலேயே இவ்வளவு மெத்தனப்போக்கு இருக்கக் கூடாது. இனி எல்லாம் இப்படி லேட்டா வரக்கூடாது என்று எல்லார் முன்னாடியும் என்னை திட்டிவிட்டார். அதனால் நான் அன்னைக்கு முழுக்க ரொம்ப அப்செட்டா இருந்தேன். அவர் திட்டியதால் எனக்கு அழுகையே வந்தது.
அந்த நேரத்தில் எங்க அம்மா தான் எனக்கு ஆறுதல் சொன்னார் பிறகு கொஞ்சம் நேரம் கழிச்சு இயக்குனருக்கு என்னுடைய பிறந்தநாள் என்பது தெரிந்திருக்கிறது. உடனே அவர் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் நான் அப்போதுதான் நினைத்தேன் நானும் ஒருநாள் ஹேமமாலினி மாதிரி வரணும் என்று என்னுடைய உழைப்பை அப்போது தொடங்கினேன் என்று அந்த பேட்டியில் பூர்ணிமா பாக்கியராஜ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications