மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து ப்ரீத்தி வெளியிட்ட முதல் பதிவு.. அப்போ இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மலர் சீரியல் கதாநாயகியாக நடித்து வந்த பிரீத்தி சர்மா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிவு அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது அடிக்கடி நிகழ்வதுதான். பல சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிப்பவர்கள் திடீரென்று மாறுவார்கள். ஆனால் ஒரு சில சீரியல்களில் தான் கதாநாயகன் அல்லது கதாநாயகி மாறுபவர்கள். முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர்களின் மாற்றத்தால் சீரியலில் பல பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக மக்கள் மத்தியில் சீரியலுக்கு மதிப்பு குறைய தொடங்கியதும் டிஆர்பியும் குறைந்துவிடும்.

Television Sun TV

ஆனால் அதுவெல்லாம் தெரிந்தும் ஒரு சில நடிகர் நடிகைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக சீரியல் நடிகர் நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் அதிகமாக வாய்ப்பு கிடைப்பதாலே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மாறி விடுகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதற்காகவும் நடித்துக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து சில நடிகர்கள் வெளியேறி விடுகிறார்கள். அந்த மாதிரி ஒரு முடிவைத்தான் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்க நடிகை பிரீத்தி சர்மா எடுத்து இருக்கிறார். இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலமாகத்தான் சின்னதிரையில் அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Television Sun TV

வெண்பா கேரக்டரில் அந்த சீரியலில் அவர் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலமாக அதிகமான ரசிகர்களும் கிடைத்து விட்டனர். பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் சன் டிவியில் மலர் சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலிலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால் சீரியலில் திடீரென்று கதாநாயகன் விலகியது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு சீரியலின் ஒளிபரப்பு நேரத்தையும் மாற்றிவிட்டார்கள்.

Television Sun TV

இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இப்போது ப்ரீத்தி திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்து சில செய்திகள் இணையத்தில் கடந்த வாரத்தில் பரவி வந்தது. அதில் ப்ரீத்தி வெளியேறியதற்கு காரணம் அவர் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதே நேரத்தில் இந்த சீரியலில் இனி மலர் அதாவது ப்ரீத்தி கர்ப்பமாக இருப்பது போன்ற நடிக்க வேண்டி இருப்பதால் அது தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று அவர் விலகி விட்டார் என்று அதில் கூறப்பட்டது.

Television Sun TV

ஆனால் இது குறித்து பிரீத்தி எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று ப்ரீத்திக்கு பதிலாக நடிகை அஸ்வதி அதாவது விஜய் டிவியில் மோதலும் காதலும் சீரியலில் நடித்து வந்த நடிகை தான் மலராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் இந்த சீரியலில் தன்னுடைய நடிப்பை தொடங்கியதும் ரசிகர்கள் மத்தியில் இனி தனக்கு மலராக வரவேற்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதே நேரத்தில் ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களாக மலராக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி, அருமையான குழுவை மிஸ் செய்யப் போகிறேன் என்று அந்த பதிவில் அவர் கூறி இருக்கிறார். ஆனால் ஏன் வெளியேறப் போகிறேன் என்பது குறித்து அவர் அதில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

Television Sun TV

அதே நேரத்தில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் மலர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் ப்ரீத்தி இந்த காரணத்திற்காகத்தான் வெளியேறினாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பற்றி பிரீத்தி என்ன சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+