18 வயதில் ரிலேஷன்ஷிப்..காதலரிடம் 2 விஷயத்துக்கு நோ சொன்ன பிரியா பவானி சங்கர்..அது புடிக்காதாமே..!
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பிடிக்காத விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
அதில் தன்னுடைய காதலனிடம் நான் இரண்டு விஷயத்தை செய்ய கூடாதுன்னு சொல்லிட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
ஒரு செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்று சீரியலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார். இந்த சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து இளைஞர்களையும் கவர்ந்து விட்டார்.

சீரியல்கள் பார்க்காதவர்கள் கூட பிரியாவிறக்காக கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடர்ந்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
அதனாலே இந்த சீரியலில் இருந்து பாதியிலே விலகி திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் கமிட் ஆகி இருந்தார். அதைத் தொடர்ந்து சன் டிவி கயல் சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி இவருக்கு பதில் நடித்து வந்தார். தற்போது கூட அந்த சீரியல் விக்ரம் வேதா (மோதலும் காதலும்) என்ற பெயரில் மீண்டும் புதிய சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது
மேயாத மான் என்ற திரைப்படத்தில் தொடங்கி, இப்போது மான்ஸ்டர், மாபியா, யானை, திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு அவர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.
இந்த சமயத்தில் தான் பிரியா பவானி சங்கரை பார்த்து எஸ்.ஜே சூர்யா பேட்டி ஒன்றில் இவருக்கு சிம்ரன், திரிஷா மாதிரி முகத்தோற்றம் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பொம்மை திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கரிடம் நீங்க சின்ன வயசுல பொம்மையை வைத்து விளையாடிருக்கிறீர்களா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் அப்படி எல்லாம் இல்ல. நான் என்னுடைய 18 வயசிலேயே ரிலேஷன்ஷிப்பில் இணைந்து கொண்டேன். என் பாய் பிரண்ட் கிட்டயும் டெடி பியர் மாதிரி ஏதாவது பொம்மையை வாங்கிட்டு வந்து கொடுத்துறாத. காசையெல்லாம் வேஸ்ட் பண்ணாத. அதற்கு பதிலாக ஏதாவது சாப்பாடு வாங்கி கொடு என்று சொல்லி இருக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் இந்த ரோஜா மாதிரியான பூக்களையும் வாங்கிக் கொடுக்கிறது வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவன், பூ வாங்கிட்டு வரதுக்குள்ள அது வாடிடும் அதனால அந்த ரெண்டு விஷயத்தையும் வேண்டாம் நீ செய்யாதன்னு சொல்லி இருக்கேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications