என்னுடைய திருமணத்தால் பட்ட வேதனை.. தப்பு தப்பா பேசாதீங்க! நடந்தது இதுதான்.. கலங்கிய நடிகை பிரியாமணி
சென்னை: பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை பிரியாமணி தன்னுடைய திருமண வாழ்க்கையை குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்து மதத்தை சார்ந்த பிரியா மணி "முஸ்தபா ராஜ்" என்பவரை திருமணம் செய்து கொண்டதால் பலர் இது "லவ் ஜி காத்" என்று தன்னை குறித்து பேசி வருவதாகவும் ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் எங்களுக்குள் நடக்கவில்லை என்று பிரியாமணி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை பிரியாமணி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உட்பட பலமொழி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொணடு பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இந்தியில் வெளியான பேமிலி மேன் சீரிஸ் மூலம் பிரபலமாகி இருக்கிறார். அதே நேரத்தில் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரியாமணியின் தனிப்பட்ட வாழ்க்கை அடிக்கடி பேசும் பொருளாக மாறி வருகிறது.
அதற்கு காரணம் பிரியாமணி இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்தபா என்பவரை கடத்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது முதல் முறையாக முஸ்தபாவும் பிரியாமணியும் சந்தித்துக் கொண்டனர்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்த நிலையில் மெல்ல மெல்ல அது காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரியாமணி சரியாக ஒரு வருடம் கழித்து ஆகஸ்ட் 23, 2017 ஆம் ஆண்டு முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அந்த நேரத்தில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு பல சர்ச்சைகளும் எழுந்தது.
பிரியாமணியின் கணவர் மீது லவ் ஜிகாத் குற்றசாட்டும் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய பிரியாமணி நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எங்களது திருமணத்தை பலர் லவ் ஜிகாத் என்று விமர்சிக்கிறார்கள். ஒருவரின் மத நம்பிக்கையை பயங்கரவாதம் அல்லது தவறான சித்தாந்தத்துடன் ஒப்பிடுவது தவறு. ஏனென்றால் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஐஎஸ் அல்லது ஜிகாத்துடன் ஒப்பிட முடியாது என்று பிரியாமணி தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் பிரியாமணி "பருத்திவீரன்" திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் "முத்தழகு"வாக ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். முதல் திரைப்படத்திலேயே ஒருவரால் இவ்வளவு நடிக்க முடியுமா? என்று வியந்து பார்க்கிற அளவிற்கு பிரியாமணியின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது.
அதிலும் கார்த்தி பின்னாடி இவர் சுற்றுவதும் பிறகு கார்த்தி தன்னை புரிந்து கொண்டு தன்னை காதலிக்கும் போது இவர் பிகு பண்ணும் போது அவ்வளவு அழகாக நடித்திருப்பார். அந்த நேரத்தில் பிரியாமணிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இப்போதும் பல திரைப்படங்களில் பிரியாமணி நடித்துக் கொண்டு இருந்தாலும் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலந்து கொண்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்து ப்ரியாமணி கண் கலங்க பேசியது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவில் என்னை பற்றி கிளம்பிய சர்ச்சைகள் என்னை மட்டும் பாதிக்கவில்லை. என்னுடைய அப்பாவும், என்னுடைய குடும்பத்தினர் எல்லோருமே பாதிப்பு அடைஞ்சாங்க.
அந்த நேரத்தில் என்னுடைய கணவர் மட்டும்தான் எனக்கு ஆறுதலாக இருந்தார். நீ ஏன் கவலைப்படுற? எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னை தாண்டி தான் உன்னை வரும். நான் உன்னை கவலைப்பட விட மாட்டேன் என்று சொன்ன பிரியாமணியின் கணவர்தான் பிரியாமணியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி இருந்தார் என்று பிரியாமணி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications