கையில் குழந்தையோடு நடிகை ரச்சிதா உருக்கம்.. "அப்போ” சொன்னது இதுதானா? குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி கையில் குழந்தையை வைத்து கொண்டு தன்னுடைய instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தனக்கும் அந்த குழந்தைக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை பற்றி நெகிழ்ச்சியோடு ரச்சிதா பகிர்ந்து இருக்கிறார்.

ஏற்கனவே நடிகை ரச்சிதா மற்றும் அவருடைய கணவருக்கும் இருக்கும் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது குழந்தையோடு இருக்கும் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மேலும் பிரபலமடைந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் உள்ளே இருக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு போயிருந்த இவர், சில நாட்களுக்கு முன்பாக எலிமினேஷனில் வெளியாகி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், தான் நடிக்கும் புது திரைப்பட சூட்டிங் ஆரம்பித்தது போன்ற சில புகைப்படங்களை ரச்சிதா பகிர்ந்து இருந்தார். அதை தொடர்ந்து இலங்கைக்கு அவர் சூட்டிங் சென்றிருப்பது போன்ற புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோ போட்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்த ரச்சிதா குடும்ப பிரச்சனை சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே ரச்சிதாவும் அவருடைய கணவர் தினேஷும் பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தினேஷ் ரச்சிதாவுக்கு அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் வெளியே வந்த பிறகு மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் வகையில் சில வாரங்களுக்கு முன்பாக ரச்சிதா தன்னுடைய கணவர் குறித்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார்.

அதுபோல ரச்சிதா தன் மீது சொல்லிய குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என்றும் தன் பக்கம் இருக்கும் நியாயங்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் நிரூபித்து விட்டேன் என்றும் தினேஷ் சில பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரை பற்றியும் பேச்சு இன்னும் சமூக வலைதளத்தில் அடங்கவில்லை.. அதற்குள் ரச்சிதா கையில் குழந்தையை வைத்து கொஞ்சியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் தற்போதைக்கு வீடியோவில் ரச்சிதா வைத்திருக்கும் குழந்தை தான் அந்த குழந்தையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அந்த வீடியோ நான் உன்னுடைய அத்தை என்று அந்த குழந்தையை குறித்து செல்லமாக கொஞ்சி இருக்கிறார்.

அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா இருக்கும்போது ரச்சிதாவின் அம்மா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் கூட வந்திருந்த நபர் ரச்சிதாவின் அண்ணன் என்று கூறப்பட்டார். அவர் தன்னுடைய மனைவிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறியிருந்தார். அந்த குழந்தைதான் இந்த குழந்தையாக இருக்கும். அதனால் தான் ரச்சிதாவின் அண்ணன் குழந்தைக்கு அவர் தானே அத்தையாக இருக்க முடியும். குழந்தையை குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா அவ்வளவு பேசியிருந்தார்.
அதனால் குழந்தையை இவ்வளவு பாசமாக ரச்சிதா கொஞ்சிக் கொண்டிருக்கிறார் என்று பலர் கருத்து கூறி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் க்யூட்டான குழந்தையோடு ரச்சிதாவை பார்த்த ரசிகர்கள் இரண்டு பேருக்கும் சுத்தி போடுங்க கண்ணு பட்டுவிட போகிறது என்று வேண்டுகோளும் வைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications