குக் வித் கோமாளியில் மணிமேகலை இடத்தில் 2 எழுத்து நடிகை.. பிரியங்கா வாய் திறக்காதது இதனால்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் மணிமேகலைக்கு பதிலாக நடிகை ராதா தொகுப்பாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய செய்திதான் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் சூட்டிங் முடிவடைந்து டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இது அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சி சேனலில் இன்னும் ஒளிபரப்பு ஆகாமல் இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அதற்கு பிறகு யார் மணிமேகலை இடத்தில் இனி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. வழக்கம் போல இந்த நிகழ்ச்சியில் ரக்சன் மட்டும் தொகுப்பாளராக இருப்பார் என்று நினைத்த நிலையில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் புகழ் மற்றும் விடிவி கணேஷ் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் இறுதி கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். அதில் பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், ஜோயா மற்றும் வி டிவி கணேஷ். இவர்கள் மட்டும் பங்கேற்கும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் மெய்யழகன் திரைப்பட குழுவினர்கள் கலந்து கொள்கிறார்கள். அதிலும் நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி இருவரும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் முன்பு தான் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மணிமேகலைக்கு பதிலாக நடிகை ராதா தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார். இது குறித்த ப்ரோமோக்கள் வெளியானதும் ரசிகர்கள் இணையத்தில் இந்த ப்ரோமோவை கலாய்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் மணிமேகலை பிரியங்கா பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா தரப்பில் இதுவரைக்கும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்காமல் விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாரா? ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த பலர் இப்போது பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் தரப்பில் இன்னும் மணிமேகலைக்கு தான் அதிகமான சப்போர்ட் இருக்கிறது. ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரியங்கா தன் தரப்பு நியாயங்களை சொன்னால் கூட அதுவும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கும் என்பதற்காகத்தான் பிரியங்கா அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடிகை வனிதா பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் அயர்லாந்துக்கு சென்றிருக்கிறார், இந்த நிகழ்ச்சியில் அதிகமான டென்ஷன் இருக்கும் அந்த டென்ஷனை தீர்ப்பதற்காக அயர்லாந்துக்கு போயிருக்கிறார்.
அங்கிருந்துதான் எனக்கு உட்பட சிலருக்கு போன் செய்து பிரியங்கா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக பிரியங்கா திரும்பி வந்ததும் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுப்பார் என்று வனிதா கூறி இருக்கிறார். அப்படி பார்க்கையில் இப்போதைக்கு இந்த பிரச்சனை முடிவுக்கு வருவது போல இல்லை என்று தான் தெரிகிறது. ஏற்கனவே பிரியங்கா தான் டூர் போறேன் என்று போஸ்ட் போட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் அடுத்த வாரத்தில் பிரியங்கா திரும்பி வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications