காலத்திற்கு தகுந்த மாதிரி மாற வேண்டும்.. வரலட்சுமியின் திருமணத்தில் இதை எதிர்பார்க்கல! ராதிகா பளிச்
சென்னை: நடிகை ராதிகா வரலட்சுமி திருமணத்திற்கு பிறகு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது வரலட்சுமி திருமணம் குறித்து பேசி இருக்கிறார். இது இணையத்தில் பல்வேறு கருத்துக்களை குவித்து வருகிறது. அதோடு சின்னத்திரை அனுபவங்கள் குறித்தும் அந்த பேட்டியில் ராதிகா பேசியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
சினிமாவில் டாப் கதாநாயகியாக ஒரு காலகட்டத்தில் இருந்த பல நடிகைகள் பிறகு அங்கு மார்க்கெட் சரிய தொடங்கியதும் சீரியல் நோக்கி அடியெடுத்து விடுவார்கள். இதுதான் பல வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையின் நிலையாக இருந்தது. ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது சீரியலிலும் காலடி எடுத்து வைத்து அங்கேயும் பலரையும் வியக்க வைத்த நடிகைகளின் முன்னோடியாக நடிகை ராதிகா தான் இருந்து வருகிறார்.

ராதிகா சரத்குமார் சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சீரியலிலும் காலடி எடுத்து வைத்து விட்டார். அதிலும் அவர் நடித்த சித்தி சீரியல் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பல வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. சித்தி சீரியல் மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி, சித்தி 2 என்று பல சீரியல்களில் நடித்திருக்கும் ராதிகா இப்போது கலைஞர் டிவியில் தாயம்மா சீரியலிலும் நடித்து வருகிறார்.
ராதிகா நடிகையாக மட்டுமல்லாமல் ராடன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல சீரியல்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் நடிகை ராதிகாவிற்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் சினிமாவில் நடிப்பது போல சீரியலில் நடிப்பது எளிமையான காரியம் கிடையாது. ஆரம்பத்தில் நாங்கள் சீரியல் இயக்கும்போது கதைக்கு தகுந்த மாதிரி காட்சிகள் இருக்கும்.
ஆனால் இப்போது டிஆர்பிஐ மையப்படுத்தி இருப்பதால் சேனல் தரப்பில் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஆக வேண்டிய நிலைமை இருக்கிறது. காலத்திற்கு தகுந்த மாதிரி நாமும் மாறிவிட வேண்டும் என்று நாங்களும் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ராதிகாவிடம் வரலட்சுமி திருமணம் பற்றி கேள்வி கேட்கையில் அதற்கும் ராதிகா பதில் அளித்திருக்கிறார்.
அது குறித்து அவர் பேசுகையில் வரலட்சுமி திருமணம். இப்போதுதான் முடிந்தது. அந்த பங்க்ஷன் எல்லாம் முடித்துவிட்டு நேற்று தான் நாங்க ஊருக்கு வந்து இருக்கிறோம். நாங்கள் எதிர்பார்க்காத வகையில் பங்க்ஷன் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வரலட்சுமியின் கணவர் தான் பல விஷயங்களை பிளான் போட்டு செய்திருந்தார். குடும்பத்தினர் எல்லோரும் அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது என்று அந்த பேட்டியில் ராதிகா பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications