ராதிகா வீட்டில் சோகமாக அமர்ந்திருந்த ராதா ரவி.. கதறி அழுத நிரோஷா! அம்மாவின் இறப்பில் நடந்த சம்பவம்
சென்னை: பிரபல நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாரும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா, நேற்று வயது மூப்பின் காரணமாகக் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீதா ராதாவின் உடல், போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

உயிரை கொடுத்து வளர்த்த அம்மா
நடிகை ராதிகா, தனது அம்மாவின் மறைவு குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அவரது மகளும், கீதா ராதாவின் பேத்தியுமான ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது பாட்டி ஒரு அற்புதமானவர். அவர் ஒரு போராளி. எனது அம்மா ராதிகா மற்றும் அவரது தங்கை நிரோஷாவையும், பேத்தி என்னையும் கஷ்டப்பட்டு வளர்த்தார்" என்று கண்ணீருடன் பதிவிட்டிருந்தார். ஒரு தாயின் போராட்டத்தையும், தன்னலமற்ற அன்பையும் இந்தப் பதிவுகள் வெளிப்படுத்தின.
கண்கலங்க வைத்த ராதிகா
தாயாரை இழந்த சோகத்தில் இருந்த நடிகை ராதிகாவிற்கு அஞ்சலி செலுத்த, நடிகர் ராதாரவி, நடிகர் பிரபு உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அப்போது ராதிகா அழுது புலம்பிய காட்சிகள், பார்ப்போரின் கண்களையும் கலங்கச் செய்தன.
குடும்ப பாசத்தின் வெளிப்பாடு
ராதிகா: கடந்த காலங்களில் தனது தந்தை எம்.ஆர். ராதா பற்றிப் பேசிய ராதிகா, "அவர் எங்களுக்கு ஒரு தந்தையாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார்" என்று பெருமையுடன் கூறியதுண்டு. அதுபோல நிரோஷா"எங்கள் தந்தை எம்.ஆர். ராதாவைப்போல் நாங்களும் தனித்துவமானவர்கள்" என்று தனது தந்தை குறித்து பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் எம் ஆர் ராதா நடித்த சில வீடியோ காட்சிகளை ராதிகா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து தன்னுடைய பாசத்தை பகிர்ந்து இருந்தார்.
அதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவின் 80 ஆவது பிறந்தநாளை ராதிகா மற்றும் நிரோஷா இருவரும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ராதிகாவின் அம்மா கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட பேண்டேஜ் ஒட்டப்பட்டு இருந்தது. அப்போதே பல பிரபலங்கள் அம்மாவிற்கு உடல்நிலை எதுவும் சரியில்லையே அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பலர் கமாண்ட் கொடுத்திருந்தனர்.
சரத்குமார்
ராதிகாவின் கணவர் சரத்குமார், தனது மாமியார் குறித்துப் பேசுகையில், "அவர் ஒரு வலுவான பெண்மணி. ராதிகா மற்றும் நிரோஷா போன்ற திறமையான பெண்களை இந்தச் சமூகத்திற்கு வழங்கியவர்" என்று பெருமையுடன் கூறியிருந்தார். எம்ஆர் ராதாவிற்கு மூன்று மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் மூன்றாவது மனைவி தான் கீதா. இவருடைய மகள்கள் தான் ராதிகாவும், நிரோஷாவும். அதுபோல எம் ஆர் ராதாவின் இரண்டாவது மனைவியான தனலட்சுமியின் மகன் தான் ராதாரவி. ராதாரவி, ராதிகா, நிரோஷா என்று மூன்று பேரும் வேறு வேறு அம்மாவுக்கு பிறந்திருந்தாலும் எல்லோரும் ஒரே குடும்பமாகத்தான் ஆரம்பத்தில் வசித்து இருக்கிறார்கள். அப்போது ராதா ரவி தங்களை மிகவும் பொறுப்பாக பார்த்துக் கொண்டார் என்று ராதிகா பல இடங்களில் பேசி இருக்கிறார். இன்று ராதிகா மற்றும் நிரோஷா இருவரும் கதறி அழுவதை பார்த்து கண்ணீருடன் ராதா ரவியும் அமர்ந்திருக்கிறார்.
கீதா ராதாவின் உடல், இன்று மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது இழப்பு, குடும்பத்தினருக்கு மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications