பிரபல நடிகை ராதிகா ஆப்தே தாய்ப்பால் தந்து போட்டோ போஸ்.. யாரந்த ஹீரோ? மாயாவின் துணிவை புகழ்ந்த பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணிச்சலான காட்சிகளில் நடிப்பதுடன், துணிச்சலான பேச்சுக்கு பெயர் பெற்றவர் துணிச்சல் நடிகை ராதிகா ஆப்தே என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் முக்கிய சம்பவம் ஒன்றையும் தன்னுடைய பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார்.

Cheyyaru Balu யூடியூப் சேனலில் செய்யாறு பாலு பேசும்போது, "கடந்த 25 வருஷமாகவே, அழகு கெட்டுப்போய்விடும் என்று நினைத்து, தாய்ப்பால் கொடுப்பதையே பெண்கள் குறைச்சிட்டாங்க. தாய்ப்பால் கொடுக்காவிட்டால் குழந்தைக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதுகூட தெரியாமல், இப்படி செய்ய துவங்கினார்கள். .

television radhika apte actress maya

ஒருகட்டத்தில், அரசே இந்த விவகாரத்தை கையில் எடுத்தது.. தாய்ப்பால் புகட்டுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியது.. ஏராளமான விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சென்றது. தாய்ப்பால் வாரம், விளம்பரங்கள் போன்றவற்றையும் மேற்கொண்டது.

நடிகை மாயா:
இதில், தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுவதையொட்டி, யாராவது ஒரு நடிகை கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற போட்டோ வேண்டும் என்று நான் பணிபுரிந்த நிறுவனத்தில் என்னிடம் கேட்டார்கள். அப்போதுதான் கவர்ச்சி நடிகை மாயா என்பவருக்கு குழந்தை பிறந்திருந்தது. அதனால் டிஜிட்டல் சண்முகம் என்ற போட்டோகிராபரை அழைத்து கொண்டு, மாயா வீட்டிற்கு சென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போல போட்டோவுக்கு போஸ் தர முடியுமா என்று தயங்கி தயங்கி கேட்டோம்.

அதற்கு மாயா, என் குழந்தைக்கு நான் தாய்ப்பால்தானே கொடுக்கிறேன்.. நான் எதுக்கு போஸ் தரணும்? என்று சொல்லி நிஜமாகவே தன் குழந்தைக்கு தாய்ப்பால் தந்தார். அந்த போட்டோவை நாங்கள் எடிட் செய்து, வெளியிட்டோம் என்றாலும், மாயாவின் இந்த போட்டோ மிகப்பெரிய பரபரப்பை அப்போது தந்துவிட்டது. அப்படியொரு துணிச்சலான நடிகை அவர்.

ராதிகா ஆப்தே:
இந்த தகவலை சொல்வதற்கு காரணம், நடிகை ராதிகா ஆப்தே, தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே வீடியோ காலில் இருக்கும்படியான போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இதைப்பார்த்து பலரும் கொந்தளித்துவிட்டார்கள்.

அதுமட்டுமல்ல, ராதிகா ஆப்தே தன்னுடைய கர்ப்ப காலத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அப்போது வெறும் சணலினால் ஆன டிரஸ்ஸை மட்டும் அணிந்து போஸ் தந்துள்ளார். இதை கண்டும் பலர் ஆவேசமாகி, கலாச்சார சீரழிவு என்று ராதிகா ஆப்தேவை கடுமையாக விமர்சித்து, திட்டி தீர்த்து வருகிறார்கள்..

"அவங்க குழந்தைக்கு, அவங்க தாய்ப்பால் கொடுக்குறாங்க? இதில் என்ன ஆபாசம் உள்ளது?" என்று ஏராளமான ஆதரவுகள் ராதிகா ஆப்தேவுக்கு இருந்தாலும், எதிர்ப்புகளும், கண்டனங்களும்தான் அதிகமாகி வருகின்றன.

விமர்சனங்கள்: இதனால் பொறுமையிழந்த ராதிகா ஆப்தே, "என்னை விமர்சனம் செய்ய என்ன தகுதி உள்ளது? யார் உங்களுக்கு இந்த உரிமையை தந்தது? என்னுடைய கர்ப்ப காலத்தில், கை கால்கள் வீங்கி போய்விட்டன. முகமும் வீங்கி போய்விட்டது. இதனால் சில சொல்ல முடியாத இன்னல்களை நான் அனுபவித்தேன்.. அதை நான் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டோ ஷூட் எடுத்தேன். இது என்னுடைய ஞாபகார்த்தமாகவும் போட்டோக்களை எடுத்திருக்கிறேன். போட்டோ எடுப்பது என்னுடைய உரிமை" என்று பதிலடி தந்துள்ளார்.

மராத்திய குடும்பத்தை சேர்ந்த ராதிகா ஆப்தே, வேலூரில் பிறந்தவர்.. பெற்றோர் இருவருமே வேலூரில் டாக்டர்களாக இருந்திருக்கிறார்கள்.. அதற்குபிறகுதான் வடமாநிலத்துக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.

பெரிய ஹீரோ: நிறைய படங்களில் துணிச்சலான காட்சிகளில் நடித்த ராதிகா ஆப்தே, தென்னிந்திய படங்களில் நடிப்பதில் தயக்கம் காட்டுகிறார்? இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கிளாமராகவும், கவர்ச்சியாகவும் நான் டிரஸ் அணிவதாலும், செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை வெளிப்படையாக பேசுவதாலும், என்னை தவறாக எல்லாரும் நினைச்சிடுறாங்க.. தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக நான் சென்றிருந்தபோது, முதல் நாளே, அந்த பெரிய ஹீரோ, நைட் ஓட்டலுக்கு வரட்டுமா? என்று ஓபனாக கேட்டார்.

நான் அதிர்ச்சியடைந்து கடுமையான எச்சரிக்கையை அந்த ஹீரோவுக்கு தந்துவிட்டு வந்தேன். ஆனால், மறுநாளே என்னை அந்த படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அப்போதிருந்தே தென்னிந்திய படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி" என்று பதிலளித்திருந்தார்..

துணிச்சல் பெண்: ஆனால், துணிச்சலான காட்சிகள், துணிச்சலான பேச்சுக்கு பெயர் பெற்ற துணிச்சல் பெண்தான் ராதிகா ஆப்தே" என்றெல்லாம் அந்த பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+