நீங்கள் தான் அரசியல்வாதி நான் இல்ல.. அந்தப் படத்தை பத்தி பேசாதீங்க, சரத்குமாரிடம் கோபப்பட்ட ராதிகா
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட ஒரு படத்தை பற்றி பேசும்போது சரத்குமாரின் கருத்துக்கு ராதிகா கோபமாக பதில் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்தை பார்த்து மனம் கஷ்டப்பட்டதாகவும், அந்த படத்தைப் பார்த்ததும் எனக்கு வாந்தி வர மாதிரி இருந்தது என்றும் ராதிகா போஸ்ட் போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் தான் பிடிக்கவில்லை என்று சொன்ன படத்தை பற்றி நல்லவிதமாக பேசிய சரத் குமாரை பார்த்து ராதிகா நீங்கதான் அரசியல்வாதி நான் உங்களை மாதிரி அரசியல்வாதி கிடையாது அதனால நான் உங்கள மாதிரி பேசணும்னு எந்த அவசியமும் இல்லையே என்று கேள்விகளுக்கு பதில் கொடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சமீபத்தில் ராதிகா சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு படத்தைப் பற்றி விமர்சித்து பதிவு போட்டிருந்தார். அதில் அவர் கடுமையாக அந்த படத்தை விமர்சித்து இருந்தார். ஆனால் அது எந்த படம் என்று அந்த படத்தின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. அதனால் பலரும் ராதிகா விமர்சித்தது அனிமல் திரைப்படத்தை தான் என்று கூறி வந்தனர்.
அதோடு ராதிகா இதற்கு முன்பு இந்த அளவிற்கு எந்த ஒரு படத்தைப் பற்றியும் கோபப்பட்டு மோசமாக திட்டியதில்லை. காரணம் ராதிகா நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல வருடங்களாக இருக்கும் நிலையில் எந்த இடத்திலும் இப்படி ஒரு படத்தை அசிங்கப்படுத்தியது இல்லை. ஆனால் அதே நேரத்தில் ராதிகா நாகரீகம் கருதி தான் அந்த திரைப்படத்தின் பெயரை சொல்லாமல் இணையத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் ஒரு சிலர் அனிமல் படம் மட்டும் இல்லாமல் வேறு சில திரைப்படங்களில் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராதிகாவின் இந்த பதிவு இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகாவிடம் அந்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதாவது நீங்கள் இதுவரைக்கும் இப்படி ஒரு போஸ்ட் போட்டதில்லையே எதனால் குறிப்பிட்ட ஒரு படத்தை பற்றி அவ்வளவு வருத்தத்தை தெரிவித்துள்ளீர்கள் என்று கேட்க அதற்கு ராதிகா, அதை பத்தி பேசாதீங்க... அந்த படத்தை பற்றி நான் இரண்டு நாளா புலம்பி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து சரத்குமாரிடம் ராதிகா திடீர் பதிவு வெளியிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு சரத்குமார் அது ராதிகா உடைய கருத்து. அதோடு சிலர் அந்த படத்தை வேற மாதிரி நினைக்கிறார்கள்.

அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள் அது எனக்கு புரியவில்லை என்று சொல்லி கூறி இருக்கிறார். அதற்கு உடனே ராதிகா அந்தப் படம் perversion மற்றும் குப்பை என்று சொல்கிறார். என்று டக்கென்று என்று ராதிகா பேசியிருக்கிறார். அதோடு சமீபத்தில் ஒரு சில நடிகைகள் ரொம்பவே திமிராக நடந்து கொள்கிறார்கள்.
நாங்கள் அந்த நேரத்தில் நல்ல படம் பண்ணனும் நல்லா கதை இருக்கணும் என்றெல்லாம் யோசித்தோம். ஆனால் இப்போ இருக்கிறவங்களில் ஒரு சிலர் அப்படி யோசிப்பதில்லை என்று எனக்கு தோணு, ஆனால் இப்போது இருக்கும் நடிகைகளால் எங்களை மாதிரி எல்லாம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
காரணம் நாங்கள் பல வருடங்களாக நடிகைகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது இருக்கிற நடிகைகள் ஒரு சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி விடுவதை பார்க்க முடிகிறது. நாங்கள் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது இருந்தது பொற்காலம் அதனால் தான் எங்களால் எத்தனை ஆண்டுகளாக தாக்கு பிடிக்க முடிகிறது என்று நினைக்கிறேன் என்றும் ராதிகா பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications