இவர் மட்டும் இல்லாவிட்டால்.. பாரதிராஜா பற்றி நெகிழ்ந்த ராதிகா.. அடடே! கடைசியில் சொன்னது தான் ஹைலைட்
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் விரைவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா, வரலட்சுமி திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கு இன்விடேஷன் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவிற்கு இன்விடேஷன் கொடுத்ததும் ராதிகா, பாரதிராஜாவின் தோளில் சாய்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் அடுத்த மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு க ஸ்டாலின், கனிமொழி, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார், வரலட்சுமியின் அம்மா சாயா என எல்லோரும் சென்று திருமண பத்திரிகைகளை வணங்கி வருகிறார்கள்.
வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் தான் நிக்கோலாய் சச்தேவ் என்பவரோடு என்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வரலட்சுமி அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வெளிநாட்டு சுற்றுலா போகும் இடங்கள் எல்லாம் புகைப்படங்களை எடுத்து குவித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திய பாரதிராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு இன்விடேஷன் கொடுத்து இருக்கிறார் அப்போது. ராதிகா பாரதிராஜாவின் தோளில் சாய்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா, "இயக்குனர் இமயம் பாரதிராஜா இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் இந்த பயணம் இருந்திருக்காது. எப்போதுமே அவரை என் இதயத்தில் மிகுந்த மரியாதையுடன், அன்புடனும் இருப்பார். என் இனிய தமிழ் இயக்குனர் பாரதிராஜா.. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடிகை ராதிகா தமிழில் அறிமுகமாகியிருந்த நிலையில் இன்று வரையிலும் அதே சிரிப்புடன் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ராதிகாவிற்காக போடப்பட்ட "கோவில் மணி ஓசை தன்னை" என்ற பாடலை ராதிகா தன்னுடைய புகைப்படத்திற்கு பயன்படுத்தி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.

வெள்ளித்திரை, சின்னத்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கும் ராதிகா அரசியலையும் விட்டு வைக்காமல் அதிலும் காலடி எடுத்து வைத்திருந்தார். ஆனாலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா மூன்றாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் தான் தோற்றுப் போய் விட்டோம் என்று உடைந்து போய் இருக்காமல் அடுத்தடுத்து தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருவதை குறித்தும் பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications