கணவர் கூட சண்டை.. கனடாவில் இருந்து வந்துட்டேன்.. ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்! நடிகை ரம்பா ஓபன்
சென்னை: நடிகை ரம்பா பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்பா தன்னுடைய கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தான் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
90ஸ் சினிமாவில் சில நடிகைகள் புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். அதற்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ரம்பா. 90ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த ரம்பா, தமிழ் சினிமாவில் பலருடைய மனதை கொள்ளை அடித்திருந்தார்.

ரம்பாவின் ஹிட் திரைப்படங்கள்
அதிலும் ரம்பாவின் நடிப்பில் உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா போன்ற பல படங்கள் இவர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அதுபோல இலங்கையை சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஐந்து குழந்தை வேண்டுமாம்
திருமணத்திற்கு பிறகு கனடாவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் ரம்பாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு திருமணத்திற்கு பிறகு 5 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் உடல் ஒத்துழைக்காததால் மூன்றுடன் நிறுத்திக் கொண்டேன் என்று காமெடியாக பேசி இருக்கின்றார்.
பிஸியோ பிஸி
குழந்தை வளர்ப்பதில் பிஸியாக இருந்த ரம்பா இப்போது குழந்தைகள் ஸ்கூலுக்கு கிளம்பியதும் மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிப்பதற்காக கதை கேட்க தொடங்கி இருக்கிறாராம். அது போல ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட ஒரு இயக்குனர் இது குறித்து பேசி இருந்தார். ரம்பாவின் கணவர் என்னிடம் அவருடைய மனைவிக்காக வாய்ப்பு கேட்டார் அவருடைய மனைவி வீட்டில் இருப்பதை கணவர் விரும்பவில்லை போல என்று கலகலப்பாக பேசி இருந்தார்.
வீட்டை விட்டு கிளம்பிய ரம்பா
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது தன்னுடைய வாழ்க்கையில் தான் செய்த எதிர்பாராத சம்பவம் குறித்து பேசி இருந்தார். அதில் ஒரு முறை எனக்கும் என்னுடைய கணவருக்கும் சின்ன வாக்குவாதம் வந்துவிட்டது. அப்போது நான் அவரிடம் எதுவும் சொல்லாமல் என்னுடைய திங்ஸை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு நான் ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணி சென்னைக்கு வந்து விட்டேன்.
பாவம் கணவர்
பிளைட்டு ஏறிய பிறகுதான் என்னுடைய வீட்டிற்கு கால் செய்து சொன்னேன். என்னை வந்து பிக்கப் பண்ணி விடுங்க என்று சொன்னதும் அவர்கள் பதறிப் போயிட்டாங்க என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே இருந்தாங்க. அதற்கு பிறகும் நான் என்னுடைய கணவர் போன் செய்து எடுக்கவே இல்லை. அவர் கனடாவில் தேடிக்கொண்டு இருந்திருக்கிறார். ஆனால் நான் சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
இப்படி ஒரு கோபமா
இங்கே வந்த பிறகும் நான் அவரிடம் பேசவே இல்லை. எங்க வீட்டில் அண்ணா தான் அவரிடம் நான் இங்கு வந்த விஷயத்தை சொல்லி இருக்காரு. அந்த நேரத்தில் அவர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு. இதுபோல கோபத்தில் நான் சில நேரங்களில் தைரியமாக முடிவெடுப்பேன். இல்லை என்றால் வீட்டுக்குள் அமைதியாக பெட்டி பாம்பு போல உட்கார்ந்திருப்பேன். எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் கோபம் வந்து விட்டால் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று துணிச்சலாக கிளம்பி விடுவேன் என்று கூறி இருக்கிறார். அதுபோல சென்னையில் அவருடைய பிரம்மாண்ட வீட்டையும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications