அடுத்தடுத்து மகிழ்ச்சி.. கணவரோடு சந்தோஷமாக போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கடந்த வருடத்தில் திருமணம் செய்து இருந்த நிலையில் அதை தொடர்ந்து தன்னுடைய தம்பியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் திருமணத்தின் போது தான் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை ரம்யா பாண்டியன் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகிறார்கள். ஆனால் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அங்கு பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைக்காததால் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ரம்யா பாண்டியன் சின்ன வயதிலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் கல்லூரி படிக்கும் போது குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் இந்த திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை.
அதற்குப் பிறகு தன்னுடைய சித்தப்பா அருண்பாண்டியன் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் வாய்ப்புக்காக பல இடங்களில் தானே முயற்சி செய்த ரம்யா பாண்டியன் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜோக்கர் திரைப்படம் ஓரளவிற்கு பிரபலத்தை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் அதில் சில நிமிடங்கள் மட்டுமே இவருடைய காட்சிகள் இருந்தது.

இதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில்தான், இவர் போட்டோ ஷூட்டை கையில் எடுத்து இளைஞர்களின் மனதை கவர்ந்து விட்டார். மொட்டை மாடியில் இவர் எடுத்த புகைப்படங்கள் இவரை பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைய செய்தது.
என்னதான் திரைத்துறை பின்புலங்கள் இருந்தாலும் பெரிதானளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிற்குள்ளே இருந்த ரம்யா பாண்டியன், கொஞ்சம் வெளியே வந்து வீட்டில் இருக்கும் மொட்டை மாடி வரை ஏறி போய் கேஷுவலாக போட்டோக்கள் எடுத்து தன்னோட சமூக வலைதளங்கள் பக்கங்களில் போஸ்ட் போட்டார். அதுவரை காற்று வாங்கிய இவருடைய சமூகவலைதள பக்கங்கள், அந்தப் போட்டோக்களை போஸ்ட் பண்ண பிறகு காத்து கூட போக முடியாத அளவுக்கு லைக்குகளும் கமாண்டுகளும் குவிய தொடங்கியது. போட்டோவை போஸ்ட் பண்ணிட்டு நைட்டு தூங்கப்போன சாதாரண ரம்யா பாண்டியன் காலையில் செலிபிரிட்டி ரம்யா பாண்டியனாத்தான் முழிச்சாங்க.

ஒரே போட்டோவால் உலக ஃபேமஸான ரம்யா பாண்டியன் அந்த பேமஸ் யூஸ் பண்ணி வந்த வாய்ப்பு எல்லாம் தவிர்க்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. வீட்டின் வெளியே மொட்டை மாடிய வச்சி பேமஸான ரம்யா பாண்டியன் வீட்டுக்குள்ள போய் பேமஸ் ஆகனும்னு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் போனாங்க. எல்லாம் நல்லாத்தான் இருக்கு உங்க கிட்ட பினிஷிங் சரியில்லப்பா என்று ரசிகர்கள் நினைத்து விட்டார்கள் போல, கொஞ்ச நாளிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரம்யா பாண்டியன் வழக்கம் போல கடைகளுக்கு ரிப்பன் கட் பண்றது, மரக்கன்று வைக்கிறது,ரியாலிட்டி ஷோல உக்கார்றதுன்னு கொஞ்சம் பிஸியா தான் இருந்தாங்க.
இந்த நிலையில்தான் ரம்யா பாண்டியன் தியான வகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது தவான் என்பவரை சந்தித்திருந்தார். ஆரம்பத்தில் நட்பாக இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பிறகு காதலாக மாறி திருமணத்தில் முடிவடைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் தான் ரம்யா பாண்டியனின் திருமணம் நடைபெற்றது.

ரம்யா பாண்டியனின் திருமணம் கங்கை நதிக்கரை ஓரத்தில் எளிமையாக நடைபெற்றாலும் அதைத் தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் தன்னுடைய தம்பி பரசு பாண்டியனின் திருமணத்தை ரம்யா பாண்டியன் நடத்தி வைத்திருக்கிறார்.
தம்பியின் திருமணத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் அவருடைய கணவர், அதுபோல ரம்யா பாண்டியன் சகோதரியான கீர்த்தி பாண்டியன் என குடும்பமாக டான்ஸ் ஆடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தம்பியின் திருமணத்தின் போது தான் எடுத்துக் கொண்டு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

அந்த பதிவில், ஏன் தினமும் சேலை அணிய முடியாது? பாரம்பரிய நேர்த்தி மற்றும் இந்த உணர்வு மீது எனக்கு காதல். என்னை அழகாக்கி என்னை நன்றாக உணர வைத்ததற்கு நன்றி.. என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications