ராஷ்மிகாவின் செம ஸ்பிரிட்.. வீல் சேரில் வந்து, நொண்டிக்கொண்டே மேடையேறி.. ஓய்வை அறிவித்த பிரபல நடிகை?
மும்பை: பிரபல நடிகை ராஷ்மிகாவின் 3 வீடியோக்கள், நேற்று ஒரே நாளில் சோஷியல்மீடியாவில் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. அத்துடன், ராஷ்மிகாவின் ரசிகர்கள், அவரை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளி கெண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா?
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.. கடந்த 2016ல் வெளியான "கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்... இதையடுத்து, "கீதா கோவிந்தம்", "டியர் காம்ரேட்", "பீஷ்மா" போன்ற படங்களில் நடித்து தெலுங்கு பட உலகிலும் பிரபலமானார்.. 'சுல்தான்' என்ற படத்தின்மூலம் தமிழிலும், 'அனிமல்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

குறிப்பாக இவரது புஷ்பா படம், தேசமெங்கும் புகழை பெற்றுத்தந்துவிட்டது.. புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கியிருப்பதுடன், இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக முதல் நிலையில் உள்ளது. இதையடுத்து, இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் ராஷ்மிகா..
ராஷ்மிகா : தற்போது, குபேரா, சிக்கந்தர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல, மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம்தான் சாவா
மகாராஜா: லக்ஸ்மன் உடேகர் டைரக்ட் செய்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும், நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள்.. நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் "சாவா" படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு மும்பை ஏர்போர்ட்டுக்கு ராஷ்மிகா வந்திருந்தார்.. ஆனால், வீல் சேரில், முகத்தை மூடியபடி வந்திருந்தார்.. முதலில் அவர் நடிகை என்றே யாருக்கும் தெரியவில்லை..
பெண் விஐபி: வீல் சேரில் வந்துகொண்டிருந்தவரை சுற்றிலும், நிறைய செக்யூரிட்டிகள் இருக்கவும், யாரோ ஒரு பெண் விஐபி என்றுதான் அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். அதற்கு பிறகுதான், அது ராஷ்மிகா என்று தெரிந்து, ஏர்போர்ட்டில் இருந்தவர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகிவிட்டது.
ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு? என்று பதறிப்போய் பலரும் கேள்விகளை எழுப்பினர்.. அதாவது, சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது ராஷ்மிகாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுவிட்டதாம். அதனால் நடக்கவே முடியாமல், ஷூட்டிங் எங்குமே செல்லாமல் வீட்டிலேயே ரெஸ்ட்டில் இருந்தாராம் ராஷ்மிகா.
காலில் காயம்: ஆனால், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "சாவா" படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா என்பதால், காலில் உள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் அதில் கலந்து கொள்ளவே வீல் சேரில் வந்திருக்கிறார் ராஷ்மிகா.. பிறகு, ஒரு காலில் நொண்டிக்கொண்டே மேடைக்கு சென்றார் ராஷ்மிகா..
இந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது.. எத்தனையோ பிரபல நடிகைகள், டிரெயிலர் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் நிலையில், வலியையும் தாங்கி கொண்டு, படவிழாவில் கலந்துகொண்டதற்கு , ராஷ்மிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ஓய்வு: அதுமட்டுமல்ல, இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டைரக்டர் லட்சுமணனிடம் பேசிக்கிட்டிருந்தேன்.. இந்த ஒரு படம் போதும்.. இதற்கு பிறகு நான் சந்தோஷமாக ஓய்வு பெற்று விடுவேன் என்று சொன்னேன்.. அந்த அளவிற்கு என் வாழ்நாளிலேயே, எனக்கு பிடித்த ஒரு படமாக "சாவா" அமைந்துவிட்டது... இதன் டிரைலரை பார்க்கும்போது விக்கி கவுசல் கிட்டத்தட்ட ஒரு கடவுள் போலவே காட்சியளிக்கிறார்" என்றலாம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications