நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? வெளியே சொல்ல முடியாத ‘பர்சனல்’ பிரச்சனை! சர்ச்சைகளுக்கு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா தாஹா விஜய் டிவியில் பிரபல சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், அவரால் இனி புது சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் அது குறித்து ரவீனா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான ரவீனா வெள்ளித்திரையிலும் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். ரவீனா 7c என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தாலும் கதாநாயகியாக மௌன ராகம் சீரியலில் நடித்திருந்தார்.

Vijay TV Raveena Daha

சீரியலில் இருந்து விலகல்

அதை தொடர்ந்து விஜய் டிவியில் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் என்ற சீரியல்னில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். அந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகி இருந்தது. அதில் படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்று கனவோடு இருக்கும் கதாநாயகிக்கும் படிக்காத முரட்டுத்தனமாக இருக்கும் இளைஞருக்கும் திருமணம் நடக்கும்போது வாழ்க்கையில் என்ன மாதிரி எல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டு இருந்தது.

நடிகை ரவீனா மீது புகார்

ஆனால் ப்ரோமோ வெளியாகி சில வாரங்களிலேயே ரவீனா அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக நடிகை ஆர்த்தி சுபாஷ் அந்த கேரக்டரில் நடிக்க சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. இப்போது சீரியல் தொடங்கி சில மாதங்களை கடந்து விட்டது. ஆனால் ரவீனா சீரியலில் இருந்து திடீரென விலகியதால் அந்த சீரியலின் தயாரிப்பாளர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்பட்டது.

Vijay TV Raveena Daha

ரியாலிட்டி நிகழ்ச்சியில் என்ட்ரி

அதோடு ரவீனா இனி எந்த சின்னத்திரை சீரியலிலும் நடிக்கக் கூடாது ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடிக்க கூடாது என்று அவருக்கு ரெட் காடு கொடுக்கப்பட வேண்டாம் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது. சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு பிறகு ரவீனா சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பிரகாஷ் என்பவருக்கு ஜோடியாக இவர் டான்ஸ் ஆடுகிறார்.

மீண்டும் கிளம்பிய பிரச்சனை

இந்த நிலையில் தான் இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. ரவீனாவிற்கு ரெட் கார்டு பிரச்சனை இருக்கும் போது அவரால் எப்படி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல ரவீனா சீரியலில் இருந்து விலகிய போது சில செய்திகளும் பரவியது அதாவது ரவீனாவிடம் கதை சொல்லும்போது நீங்கதான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறீங்க என்று கூறப்பட்டது ஆனால் பிறகு இரண்டுக்கு கதாநாயகிகள் என்பதால் தனக்கு முக்கியத்துவமான கேரக்டர் இருக்காது என்று அவர் விலகியதாக கூறப்பட்டது.

Vijay TV Raveena Daha

சர்ச்சை

ஏற்கனவே மௌனராகம் சீரியலிலும் இரண்டு கதாநாயகிகள் கேரக்டரில் தான் ரவீனா நடித்திருந்தார். ஆனால் சிந்து பைரவி சீரியலில் அதேபோல நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த இடத்திலும் ரவீனா இதுபற்றி பேசவில்லை.

விளக்கம்

இந்த நிலையில் இப்போது ரவீனா பற்றி பரவி வரும் ரெட் கார்டு சர்ச்சை குறித்து ரவீனா பேசுகையில் என் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எனக்கு ரெட் கார்ட் எல்லாம் தரப்படவில்லை. அதுபோல கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட போது பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக முடிஞ்சிடுச்சு. அதனால் நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொடர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதுபோல சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு என்னுடைய பர்சனல் காரணம்தான் வேறு எதுவும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+