இதற்கெல்லாம் தனி தில்லு வேணும்.. நடித்த சீரியலை போஸ்ட் போட்டு வெளிப்படையாக கலாய்த்த ரேஷ்மா
சென்னை: நடிகை ரேஷ்மா பசிபுலேட்டி ஜீ தமிழில் சீதாராமன் மற்றும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிக்கும் சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் அந்த சீரியலை குறித்து வெளிப்படையாக போஸ்ட் போட்டு கலாய்த்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஒரு சில சேனல்களில் மட்டும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் சின்னத்திரையில் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து புதியது புதியதாக சேனல்கள் தொடங்கப்பட்டு அதில் பல சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியல்களையும் மொழிபெயர்ப்பு செய்து தமிழ் சேனல்களில் ஒளிபரப்ப அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆனாலும் சமீபத்தில் சின்ன திரையில் எல்லா சீரியல்களிலும் ஒரே கதை தான் பட்டி டிங்கரிங் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். கதாநாயகி ஏழ்மையான குடும்பத்தில் இருப்பார். கதாநாயகன் பணக்காரராக இருப்பார். ஆனால் கதாநாயகன் வீட்டில் அவரை கல்யாணம் செய்வேன் என்று ஒரு அத்தை மகளோ மாமன் மகளோ அல்லது தோழியோ கூட இருப்பார். ஆனால் எதிர்பார்க்காதபடி கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடக்கும்.
அதுவும் இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்ய மாட்டார்கள். கட்டாயத்தின் பேரில் தான் திருமணம் நடக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி கதாநாயகனை புரிந்து கொண்டு அவரோடு வாழ்க்கையை தொடங்க நினைப்பார். ஆனால் அங்கிருக்கும் வில்லி இவர்கள் இருவரையும் சேர விட மாட்டார். இதுதான் பல சீரியல்களின் கதையாக இருக்கிறது.

இதற்கு கொஞ்சம் மாற்றாக யோசித்தால் கதாநாயகனின் அம்மா தான் கதாநாயகிக்கு எதிரியாகவும் சில சீரியல்களில் இருக்கிறார்கள். இப்படித்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலும் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு கதாநாயகி அவருடைய கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் ஹீரோவின் சித்தி இவர்கள் இருவரும் சேரக்கூடாது என்று பிளான் போட்டு அவர்களை பிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கதையை பாராட்டி ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள், கழுவி ஊத்தும் ரசிகர்களும் இருக்கிறார்கள். எது எப்படியோ இந்த சீரியல் ஒரு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது.
இது குறித்து இந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலாய்த்து போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், "கடைசி வரைக்கும் சீரியலின் கதையை சொல்லாமலேயே சீரியலை முடித்து விட்டார்கள். எது எப்படியோ நீங்க இந்த சீரியலை பார்த்ததற்கு நன்றி மக்களே" என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications