திருமணமாகி பல மாதம் கழித்து கணவரோடு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த ரித்திகா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்த பிரபலமான நடிகை ரித்திகா தன்னுடைய கணவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு தனக்கு திருமணம் ஆகி 365 நாட்கள் ஆகி விட்டது என்று தன்னுடைய திருமண நாளைக் குறித்து உருக்கமாக ரித்திகா மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் ரித்திகாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் ஒன்றில் வினோதினி கேரக்டரில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய ரித்திகா முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதில் தன்னுடைய முகத்தை பதிய வைத்து விட்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு இருக்கிறார்.
சுந்தரி சீரியல் கதாநாயகனுக்கு சன் டிவி டாப் சீரியல் கதாநாயகியோடு திருமணம்.. முதல் போஸ்டே இப்படியா?
அதை எல்லாம் தாண்டி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்து ரித்திகா ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார். அதற்கு பிறகு தான் ரித்திகாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரித்திகாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருந்தனர். இந்த நிலையில் தான் ரித்திகாவிற்கு விஜய் டிவி பிரபலமான வினு என்பவரோடு திருமணம் முடிவடைந்தது.
திருமணத்திற்கு பிறகு ரித்திகா நடிக்க மாட்டாரா? என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ரித்திகா மீண்டும் நடிப்பை தொடங்கி இருந்தார். ஆனால் சில மாதங்களிலே சீரியலில் ஏற்பட்ட கதையின் மாற்றம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை சொல்லாமலேயே திடீரென்று ரித்திகா சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவர் நடித்த அமிர்தா கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரித்திகா இன்று தன்னுடைய கணவரோடு கோவில் ஒன்றில் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு தனக்கு திருமணம் முடிந்து 365 நாட்கள் ஆகிவிட்டது என்று மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய முதல் திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடும் ரித்திகாவிற்கு சின்னத்திரை, பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரித்திகா கலந்து கொள்வார் என்று பல செய்திகள் பரவி வந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகு பெரிய அளவில் எந்த சீரியலிலும் வரவில்லையே என்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனாலயே தொடர்ச்சியாக ரித்திகா இனி நடிக்க மாட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதுபோல ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து இருந்தாலும் இப்போது அந்த சீரியலில் கதை இடியாப்ப சிக்கலாக இருப்பதால் இவருடைய கேரக்டரும் ரசிகர்களின் மத்தியில் தப்பாகத் தான் போயிருக்கும். அதனால் இவர் சீரியலை விட்டு விலகியது நல்லது தான் என்று பாராட்டியும் வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications