தாய்மையின் முதல் அத்தியாயம்..பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா வெளியிட்ட போஸ்ட்..வாழ்த்தும் பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்த நடிகை ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரித்திகா விஜய் டிவியில் பல வருடங்களாகவே தொகுப்பாளராகவும், நடிகையாகவும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அதிலும் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரித்திகா கலந்து கொண்டிருக்கிறார்.

அதோடு நடிகை ஆலியா மானசா சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் கதாநாயகன் சஞ்சீவ் தங்கையாக நடித்திருந்தார். அதனாலேயே விஜய் டிவி ரசிகர்களின் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவராக மாறி இருந்தார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது பெரிய அளவில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் பாலா இவர் பின்னாடி சுற்றுவது போன்று கலாய்ப்பது உண்மை என்று பல ரசிகர்கள் நம்பி இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்று கூட சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் நாங்கள் இருவரும் நிகழ்ச்சிகளில் கன்டென்ட்க்காக பேசிக் கொள்வோம் அவ்வளவுதான். நிகழ்ச்சி முடிந்த பிறகு நான் யாரோ அவர் யாரோ என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிக்க தொடங்கியிருந்தார். ஆரம்பத்திலேயே இவருடைய கேரக்டர் அனுதாபம் வாங்கும் வகையில் தான் இருந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் இவர் கணவரை இழந்து, ஒரு குழந்தையோடு இருக்கும் கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு எழிலோடு அமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டு திருமணம் நடப்பதில் பிரச்சனை என்று அமிர்தாவிற்கு அடுத்தடுத்த பிரச்சினைகளாகவே அந்த சீரியலில் இருந்து. அதனாலேயே என்னவோ திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலகி விட்டார். இதற்கு இடையில் விஜய் டிவி பிரபலமான வினுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகி இருந்த நிலையில் அதற்கு பிறகு பெரிதாக சீரியல்களில் தலை காட்டவில்லை. இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். தற்போது அவர் நிறைமாதமாக இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பதிவிற்கு "தாய்மையின் முதல் அத்தியாயத்தில்" என்று ரித்திகா கேப்ஷன் கொடுத்திருக்கிறார். விரைவில் இந்த உலகத்தை பார்க்க வர இருக்கும் தன்னுடைய குழந்தை குறித்து சில நாட்களாகவே ரித்திகா பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications