விஜய் ஆண்டனி படத்தில் நடந்த கொடுமை.. சொன்னது வேறு செய்தது வேறு.. பிரபல சீரியல் நடிகை வருத்தம்
சென்னை: பகல் நிலவு, தாலாட்டு, கண்ணான கண்ணே போற்ற சீரியல்களில் நடித்த நடிகை சஹானா தன்னுடைய சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
சஹானா சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அதிலும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த "சலீம்" என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் ஏமாற்றங்கள் குறித்தும் பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சில நடிகைகள் சீரியலில் இருந்து சினிமாவுக்கு போய் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் திரைப்படங்களில் அறிமுகமாகி அங்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்ன திரையில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சஹானா. இவர் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.
அதே நேரத்தில் சலீம், தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து விட்டது. தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நேரத்திலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல ரகசியங்களை பேசி இருக்கிறார். அப்போது நான் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்தேன். ஆனால் அதுவெல்லாம் ஆரம்பத்தில் வீணாகவே போய்விட்டது. நான் ஆரம்பத்திலேயே சினிமாவில் நடிப்பதற்கு பதிலாக சீரியலில் வாய்ப்பு தேடி இருந்தால் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கலாம். நான்தான் தவறு செய்து விட்டேன்.
அதுபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தாரை தப்பட்டை திரைப்படத்தை தவிர வேறு எந்த திரைப்படத்திலும் எனக்கு சரியான கேரக்டர் அமையவில்லை. விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று தான் எனக்கு ஆரம்பத்தில் கதை கூறினார்கள். உங்களை வைத்து தான் கதையே நகரப் போகிறது என்று சொன்னார்கள். அதை நம்பித்தான் நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால் பிறகு வேறு விதமாக சூட்டிங் எடுத்தார்கள்.

அந்தப் படத்தில் பல காட்சிகள் இருப்பதாக என்னிடம் கூறிவிட்டு ஒரு சில காட்சிகள் மட்டும் என்னை வைத்து எடுத்தார்கள். அதிலும் முகத்தில் ஆசிட் வீசிய காட்சிகளுக்கெல்லாம் நான் பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தேன். அது மட்டும் இல்லாமல் இன்னொரு காட்சியில் அதாவது சாக்கடையிலிருந்து என்னை எடுக்கும் படி இருக்கும் அதற்காக என் மீது முழுவதும் சிமெண்ட் மாதிரி ஏதோ ஒரு கலவையை ஊற்றினார்கள்.
நான் அதை ஊற்றுவதற்கு முன்பு எவ்வளவோ தடுத்து பார்த்தேன். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. மூக்கு, காது எல்லாம் அடைத்துவிட்டது. அந்த திரைப்படத்தில் என்னை அவர்கள் ஒரு மனுசியாகவே மதிக்கவில்லை. அதற்குப் பிறகு நான் விஜய் ஆண்டனியிடம் என்னிடம் முதலில் கதை சொல்லும் போது நிறைய காட்சிகள் இருக்கு என்றார்கள். ஆனால் இப்ப எதையுமே எடுக்கல என்று சொன்னேன். அதற்குப் பிறகு அவர் இயக்குனரிடம் பேசினார். ஆனால் அதையும் எடிட்டிங்கில் தூக்கி விட்டார்கள் என்று அந்த பேட்டியில் சஹானா பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications