ஹிந்து பையனை கல்யாணம் செய்த பிறகு, தீபாவளி ஸ்பெஷல்.. நெகிழ்ந்த நடிகை.. மோசமான கமெண்ட்! இப்படியா பேசுவாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிகை சல்மா அருண் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் தீபாவளியை கொண்டாடியதாகவும் தன்னுடைய தலை தீபாவளி ரொம்பவும் ஸ்பெஷல் என்று எமோஷனலாக பேசி இருந்தார். ஆனால் அந்த வீடியோவிற்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் குவிந்து வருகிறது.
இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பிரபலங்கள் பற்றியோ அல்லது தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதாலேயே சிலர் மோசமான கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். சிலர் ஃபேக் ஐடியில் முகம் காட்டாமல் எதிர் பக்கத்தில் ஒருவர் சந்தோஷத்தை பகிர்ந்தாலும் சரி, துக்கத்தை பகிர்ந்தாலும் சரி சரமாரியாக அவர்களை கமெண்ட் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இது மோசமான செயல்
அதனால் பிரபலங்களின் மனதும் சரி, அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிலர் யோசிக்காமல் செய்யும் செயலால் பல குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து பல பிரபலங்கள் வெளிப்படையாக பேசினாலும் இணையத்தில் முகம் காட்டாதவர்களின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
சிறகடிக்க ஆசை ரோகிணி
சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மா அருணுக்கு இதே சம்பவம்தான் நடைபெற்றிருக்கிறது. சல்மா அருண் ஏற்கனவே சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஒரு சில எபிசோடுகள் மட்டும் வந்திருந்தார்.
சீரியலில் வில்லி
அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் அமுதாவின் அண்ணியாக நடித்திருந்தார். இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக இவர் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார். அதுபோல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் ஒரு பேட்டியில் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறார்.
கணவரின் சப்போர்ட்
அதில் சல்மா பேசுகையில், என்னுடைய கணவர் அருண் தான் நான் நடிப்பதற்கு காரணம். எல்லோரும் நடித்து பிரபலமான பிறகுதான் திருமணம் செய்வார்கள். ஆனால் எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் திருமணம் முடிந்து எனது மகன் பிறந்த பிறகு என்னுடைய கணவரின் சப்போர்ட்டால் நான் நடிக்க தொடங்கி இருக்கிறேன்.

தலை தீபாவளி ஸ்பெஷல்
இப்போதும் நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் அவர்தான். அவர் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அதனால் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார் என்று பேசி இருந்தார். அதுபோல தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் குறித்து அவர் பேசுகையில் எனக்கு திருமணத்திற்கு பிறகு வந்த முதல் தீபாவளியை மறக்க முடியாது.
மறக்க முடியாத தீபாவளி
நான் முஸ்லிம் பொண்ணு என்பதால் எனக்கு தீபாவளியை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் என்னுடைய கணவரை நான் திருமணம் செய்த பிறகு அவருடைய வழக்கப்படி தலை தீபாவளியை பெருசாக கொண்டாடினார்கள். அப்போது புது துணி எடுத்து விதவிதமாக சாப்பாடு எல்லாம் வைத்து வித்தியாசமாக கொண்டாடினார்கள். அப்போதுதான் இதுதான் தீபாவளி என்று எனக்கு தெரியும். அதனால் அந்த தீபாவளியை எனக்கு மறக்க முடியாது என்று பேசி இருக்கிறார்.
சிலருடைய வன்மம்
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சிரித்த முகமாக பேசி இருந்தாலும் அதற்கு கமெண்டில் பலர் இவர் மதம் மாறிவிட்டார் என்று தனிமனித தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கமாண்டுகளில் சல்மாவையும் அவருடைய குடும்பத்தையும் சிலர் அசிங்கமாக பேசி இருக்கிறார்கள். அதுபோல சல்மாவிற்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
தொடரும் அராஜகம்
பொதுவாக சம்பந்தப்பட்ட இருவர்கள் திருமணம் செய்து அவர்களுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்தாலும் இது போன்று சோசியல் மீடியாவில் முகத்தை காட்டாமல் தங்களுடைய வன்மத்தை கக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிரபலமாக ஒருவர் இருக்கிறார் என்றால் அவரைப் பற்றி என்ன வேணாலும் பேசலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்றும், ஆபத்தான விஷயம் என்றும் பலருக்கு புரிவதில்லை. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்?












Click it and Unblock the Notifications