சமந்தா போயும் போயும் 2வது மனைவியா போகணுமா.. கல்யாணத்துக்கு ரெடியாயிட்டாரு.. மாப்ள இவருதான்: பிரபலம்
சென்னை: நாக சைதன்யாவுடன் இருந்த போட்டோக்களை எல்லாம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார் நடிகை சமந்தா. அதேபோல, நாக சைதான்யா ஜீவனாம்சமாக தரப்போவதாக சொன்ன பல கோடி ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 10 பைசாகூட வேண்டாம் என்று சமந்தா சொன்னதால், சமந்தாவை தெலுங்கு மீடியாக்கள் இன்னமும் பாராட்டி தள்ளி வருகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவும், சமந்தாவும் அன்று தீவிரமான காதலில் ஈடுபட்டு வந்தனர்.. இதனால, இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் சம்மதம் தரப்பட்டது. இதையடுத்து, 2017ம் ஆண்டில் கோவாவில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஆர்வமாக இருந்தார் சமந்தா.. இதற்கு நாக சைதன்யாவும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. ஆனால், மாமனார் தரப்பில் சமந்தா நடிப்பதற்கு எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. எனினும் சினிமாவில் நடிப்பதில் உறுதியாக இருந்தார் சமந்தா.. இந்நிலையில்தான், இருவரும் திடீரென விவாகரத்து அறிவித்தனர்.
2வது திருமணம் உண்மையா
சினிமாவில் நடிக்க வந்ததால்தான், மணமுறிவு ஏற்பட்டதாக சிலர் சொன்னார்கள்.. சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் இருந்தால்தான் , மணமுறிவு ஏற்பட்டதாக மேலும் சிலர் சொன்னார்கள்.. எனினும், இதுகுறித்து உண்மைத்தன்மை தெரியவில்லை. இதற்கு பிறகு, நாக சைதன்யா 2வது திருமணம் செய்து கொண்டார்.. இப்போது சமந்தாவும் 2வது திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நாக சைதான்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார் சமந்தா.. விவாகரத்துக்கு பிறகு மிகவும் செக்ஸியாக நடித்தார் சமந்தா. ஆனாலும் அந்த படங்கள் சரியாக போகவில்லை.. எனவே வெப் தொடருக்கு மாறினார்.. ராஜூ நிடுமூடுவு என்பவர் இயக்கிய வெப்தொடரில் நடித்தது சமந்தாவுக்கு மிகப்பெரிய புகழை தந்தது..
போயும் போயும் 2வது தாரமா
இதனிடையே டைரக்டர் ராஜூ நிடுமூடுவுக்கும் சமந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் டேட்டிங் செய்தார்கள்.. சமீபத்தில்கூட திருப்பதி, காளஹஸ்தி கோயிலுக்கு இணைந்து பிரார்த்தனை செய்தார்கள்.. பல கோயில்களுக்கும் சென்று வந்தார்கள்.. அதற்கேற்றவாறு இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போவதாக, தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வந்தன. இதனை இரு தரப்பினரும் மறுக்கவில்லை.
தற்போது இவர்களின் திருமணம் உறுதியாகிவிட்டது. ஆனால், ராஜூ நிடுமூடுவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. அவரது மனைவி பெயர் ஷ்யாமன்.. ஆனால் தம்பதி இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்களா என்பது கேள்விக்குறி.
ஜீவனாம்சம் எத்தனை கோடி
சமந்தா இத்தனை காலமும் பொறுமைகாத்து, 2வது தாரமாகவே இன்னொரு டைரக்டருக்கு மனைவியாகிறாரே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.. போயும் போயும் 2வது தாரமா? என்று பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், எதை பற்றியும் சமந்தா கண்டுகொள்ளவில்லை..
ஏற்கனவே நாக சைதன்யாவுடன் இருந்த போட்டோக்களை எல்லாம் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். நாக சைதான்யா ஜீவனாம்சமாக தரப்போவதாக சொன்ன பல கோடி ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 10 பைசாகூட வேண்டாம் என்று சமந்தா சொன்னதால், சமந்தாவை தெலுங்கு மீடியாக்கள் இன்னமும் பாராட்டி தள்ளி வருகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications