இரண்டாவது கல்யாணம் செய்கிறார் நடிகை.. இந்த பிரபலம்தான் மாப்பிள்ளையா? விரைவில் நல்ல செய்தி? உண்மையா?
சென்னை: நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் நடைபெற போவதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமந்தா திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை மீண்டும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. இதையடுத்து, சமந்தாவும், 2வது திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதனிடையே, இயக்குநருடன், சமந்தாவுக்கு 2வது திருமணம் என்ற வதந்தி, இணையத்தில் வட்டமடித்தது.. இதைப்பார்த்த சில ரசிகர்கள், ஏற்கனவே திருமணமானவருடன் மறுமணம் வேண்டாம் என்று சமந்தாவுக்கு அன்பு கட்டளையை போட்டு வருகிறார்கள்.
சித்தார்த்: இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவுக்கு 2வது திருமணம் குறித்து பேசியிருக்கிறார். King 24X7 சேனலில் அவர் சொல்லும்போது, "
நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டூகெதரில் வாழ்ந்து வந்த சமந்தா, அதனை பிரேக் அப் செய்துவிட்டார்.. பிறகு, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். பிறகு நடிகை சோபிதாவை 2வது திருமணம் செய்தார் நாக சைதன்யா.. சோபிதாவும் ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
பேமிலிமேன்: இதனிடையே, தான் பணியாற்றிய பேமிலிமேன் என்ற வெப்சீரிஸ் டைரக்டர், ராஜூ நிடுமூடு என்பவரை சமந்தா, திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிகைகளில் செய்திகள் கசிந்தன..
அதுமட்டுமல்ல, "பாதுகாப்பான வாழ்க்கை துணை, கைக்குழந்தையோடு இருந்தாலும் பரவாயில்லை" என்று சமந்தா போஸ்ட் போட்டிருந்தது, ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது, டைரக்டர் ராஜு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்களாம். எனினும், பாதுகாப்பாக கணவன் இருந்தால் போதும், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று சமந்தா நம்புவதாகவும், அதனால்தான், இப்படியொரு போஸ்ட் போட்டதாகவும் அந்த நேரத்தில் செய்திகள் வட்டமடித்தன.
பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன், சமந்தா குறித்து கூடுதல் தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், "சமந்தா கையில் தமிழ், தெலுங்கில் படம் எதுவும் இல்லை.. ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டும் இப்போது நடித்து கொண்டிருக்கிறார்..
"இதுதான் என்னுடைய கடைசி படம்.. என்னால் முடியவில்லை.. எனக்கு வந்த நோய் என்னவென்றும் தெரியவில்லை.. அந்த நோயிலிருந்து முழுமையாக இன்னும் நான் விடுபடவில்லை. அதனால், படம் இல்லாமலும், நோயின் வேதனையிலும் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதனால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படத் தயாரிப்பாளர்கள், சமந்தாவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருகிறார்கள்.. இதனால் சமந்தாவுக்கு கைவசம் படம் இல்லை..
பெரிய பெரிய செய்திகள்: எனவே, திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாமா? என்ற யோசனையில் இருக்கிறார்.. அதற்கேற்றவாறு, ராஜூ நிடுமூடு டைரக்ருடன் கைகோர்த்து வலம் வந்த வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார்.. இதையடுத்து, இயக்குனருடன் இரண்டாவது திருமணம் செய்ய போவதாக, தெலுங்கு மீடியாக்களில் பெரிசு பெரிசாக செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன" என்று பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications