இந்த நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது..பிக்பாஸ் சம்யுக்தாவின் வேதனையான மறுபக்கம்.. கண்ணீரோடு மகன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை சம்யுக்தா பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.
அவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் காபி வித் காதல், வாரிசு போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் குறித்தும் அவர் தனக்கு செய்த துரோகங்கள் குறித்து அதில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது பற்றியும் பேட்டியில் பேசுகிறார். தற்போது இதற்கு அதிகமான நடிகர் சம்யுக்த்தாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அது பற்றி விரிவாக பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு மாடலாக அறிமுகமான சம்யுக்த்தா பல்வேறு பேஷன் ஷோக்கள், விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற நாடகத்திலும் ராதிகா சரத்குமாருக்கு வில்லியாக ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

ஆனாலும் அதில் எல்லாம் சம்யுக்தா பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் இவர் யார்? எதில் எல்லாம் நடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். அது மட்டுமில்லாமல் இந்துலேகா ஆயில் விளம்பரத்தில் நடித்த பெண்ணின் தலைமுடியின் நீளத்தை பார்த்து நிறைய பேர் அதை வாங்கிய பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அந்த விளம்பரத்தில் நடித்தது நடிகை சம்யுக்தா தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாமின் மனைவியாக இவர் நடித்திருந்தார். அதுபோல காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியாக இவர் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் இவரை விட்டு விட்டு இன்னொரு பெண்ணோடு தொடர்பில் இருப்பார். அதுபோன்றுதான் இவருடைய நிஜ வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சம்யுக்தாவின் வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சிகள் கிடைத்ததாம். நான்கு வருடங்களாக இவரோடு வாழ்ந்து வந்த கணவர் வெளிநாட்டில் இன்னொரு பெண்ணோடு லிவிங் ரிலேஷனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இவருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்திருக்கிறது. அந்த நேரத்தில் கொரோனா காலகட்டமும் வந்துவிட்டதால் இவரால் அங்கே போக முடியாமல் ஆகிவிட்டதாம்.
அந்த நேரத்தில் தன்னுடைய இதயமே உடைந்து போய்விட்டது. ஆனால் எனக்கு என்று ஒரு மகன் இருக்கிறான் என்று என்னுடைய மொத்த கவலையையும் நான் பல நாட்களாக அழுது தீர்த்து இருந்தேன். அதற்கு பிறகு அதிலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது. ஒருவர் நம்மை விட்டு இன்னொருவரிடம் சென்ற பிறகு அதை இழுத்து வைத்து அந்த உறவு நமக்கு வேண்டும் என்று நாம் மனதளவில் கூட நினைக்கக் கூடாது.
அது வேண்டாம் என்றால் விட்டு விட வேண்டும். ஆனால் இப்போதும் என்னுடைய மகன் அப்பா எங்கே என்று கேட்கிறார். ஆனால் என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல கணவராகவும் இல்லை, குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையாகவும் இல்லை ஆனாலும் என்னுடைய பையன் அவரைப் பற்றி எங்கே என்று கேட்கும் போது அவ்வளவு வலியாக இருக்கும்.
நான் அவரை என்னுடைய வாழ்க்கையில் இருக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் பல முயற்சிகளை எடுத்தேன். எல்லாமே பிறகு தவறு என்று தெரிந்தது என்று தண்ணீரோடு அந்த பேட்டியில் நடிகை சம்யுக்தா பேசியிருக்கிறார். தற்போது இதற்கு அதிகமானோர் சம்யுக்தாவிற்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications