அப்பாவால் பட்ட வேதனை.. துணையாய் இருந்த அண்ணன் மரணம்.. நடிகை சாண்ட்ரா எமோஷனல்
சென்னை: தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் பலருக்கும் பரீட்சையமான நடிகை சாண்ட்ரா எமி அவருடைய கணவர் பிரஜன் உடன் பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் நடிகை சாண்ட்ரா பல சீரியல்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இப்போதும் அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் தான் கவனத்தை செலுத்தி வருகிறார். இரட்டை குழந்தைகள் இருக்கும் சாண்ட்ரா அந்த குழந்தைகளை வளர்ப்பதற்கே தனக்கு தன்னுடைய நேரத்தை செலவழித்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து கண்ணீரோடு பேசியிருக்கிறார்.

அதில் சாண்ட்ரா பேசுகையில் நானும் என்னுடைய அண்ணனும் சிறுவயதில் இருக்கும் போது என்னுடைய அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்து விட்டார்கள். அவர்களுக்கு விவாகரத்து ஆன பிறகு நானும் அண்ணனும் அப்பாவோடு சென்று விட்டோம். அப்பாவோடு இருந்த கொஞ்ச நாளிலேயே அப்பா நான் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னார்.
அப்போ அண்ணன் உடனே சரி என்று சொல்லிவிட்டார். நான் சரி என்று சொல்லவில்லை ஆனால் நாம் அப்பா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் பிறகு அப்பா தனிமையில் இருக்கும்போது உங்களால்தான் என்னுடைய வாழ்க்கை வீணாக போய்விட்டது என்று சொல்லுவார் என்று பயந்து நானும் பிறகு திருமணத்திற்கு சரி என்று சொல்லிவிட்டேன்.
ஆனால் எங்களுடைய சித்தி வந்த பிறகு எங்களுடைய வாழ்க்கை நரகமாக மாறியது. எங்களுக்கு அதிகப்படியான கொடுமைகள் நடந்தது. அதற்குப் பிறகு அண்ணன் எனக்கு துணை இருக்கிறார் என்ற தைரியத்தில் நானும் இருந்தேன். ஆனால் 2016 ஆம் ஆண்டு அண்ணன் ஒரு விபத்தில் இறந்து போய்விட்டார். அண்ணன் இறந்த அடுத்த நாளே அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அண்ணன் உயிரோடு இருந்த வரைக்கும் அவர் ஒரு பொண்ணை காதலித்த விஷயமே எங்களுக்கு தெரியாது. அந்த பொண்ணு இறந்த பிறகு தான் இவர்களுடைய காதல் எங்களுக்கு தெரிந்தது... அந்த நேரத்தில் நான் சீரியல்களில் நடிக்க தொடங்கி இருந்தேன். அதற்குப் பிறகுதான் நான் பிரஜனை சந்தித்தேன். அவர் நடிப்பில் அதிகமான திறமைகளை வைத்திருந்தார். எனக்கு பொதுவாக நன்றாக நடிப்பவர்களை ரொம்பவே பிடிக்கும்.
அதுபோல பிரஜனில் குணங்களும் எனக்கு தெரிய வந்தது. அதற்கு பிறகு தான் நான் அவரை காதலித்தேன். பிரஜனை திருமணம் செய்து கொண்ட பிறகு எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். பிறகு குழந்தையை வளர்ப்பதற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். எங்களுக்கு இரண்டு குடும்பத்தில் இருந்தும் பெரிய அளவில் சப்போர்ட் இல்லாததால் குழந்தைகளை நாங்களே வளர்க்க வேண்டிய நிலைமையில் தான் இருந்தோம்.
அந்த நேரத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் நாங்கள் கஷ்டப்பட்டு இருக்கிறோம். அந்த நேரத்தில் பிரஜன் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போ அவரிடம் குழந்தைகள் பற்றிய கஷ்டங்களை சொல்ல மாட்டேன். இரண்டு குழந்தைகளை வளர்த்து எடுப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. இரவு முழுக்க தூங்காமல் பிரச்சனை பல நாள் இருந்திருக்கிறார். அதற்கு பிறகு சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது டிராபிக்கில் பிரஜன் தூங்கி விடுவதாக அவரோடு கூட இருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அதனாலேயே குழந்தைகள் பற்றிய கஷ்டத்தை நான் அவரிடம் ஷேர் பண்ணுவதை விட்டு விட்டேன். பிரஜன் சிறந்த நடிகர் அவருக்கு சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் சின்னத்திரை அவருக்கு வெற்றியை கொடுத்தது. சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவரும் பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை வனிதா மகன் பற்றிய கேள்விக்கு ஜோவிகாவின் பதில்.. இப்படி வெளிப்படையா சொல்லிட்டாரே!
கண்டிப்பாக அதற்கான வெற்றி ஒரு நாள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சாண்ட்ரா அந்த பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார். சாண்ட்ரா ஜீ தமிழில் ஒளிபரப்பான தலையணை பூக்கள் சீரியலில் நடித்து இருப்பார். அதுபோல அவருடைய கணவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications