அஜித் பட வாய்ப்பை தவிர்த்த காரணம் இதுதான்.. இரண்டு கிளைமாக்ஸ் இருந்தது.. மனம் திறந்த நடிகை சங்கீதா
சென்னை: 90ஸ் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான நடிகை சங்கீதா பல வருடங்கள் கழித்து தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் தனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த பூவே உனக்காக திரைப்பட அனுபவங்கள் குறித்து பல தகவல்களை சங்கீதா பேசி இருக்கிறார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் தான் எதற்காக நடிக்கவில்லை என்பது பற்றியும் அதில் சங்கீதா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ரசிகர்கள் தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பார்ப்பது தங்களுடைய மனக்கவலை தீர வேண்டும் என்றும், தங்களுக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காகத்தான். இதை நாடுகின்றனர். அதே நேரத்தில் சில நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விடுகிறார்கள்.
விஜயகாந்த் அந்த மாதிரி கிடையாது.. கண்டிப்பா அவரை பார்த்தால் இதை கேட்பேன்.. நடிகை சங்கீதா ஓப்பன் டாக்
எத்தனை வருடங்கள் கழிந்தாலும் அவர்கள் பற்றிய நினைவுகளும் அவர்கள் நடித்த திரைப்படங்களும் ரசிகர்கள் நினைவு கூற தவறவில்லை. அந்த மாதிரி தான் நடிகை சங்கீதாவும் இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதுவும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருக்கும்.
ஒரு குடும்பத்தின் பேத்தியாக இருக்கும் இவர் தன்னுடைய இடத்தில் விஜய் அங்கு நடித்துக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு அவருடைய மனைவி நான் தான் என்று அவரும் அங்கு நடித்துக் கொண்டு செய்யும் சேட்டைகள் அதுவும் நடிகர் நாகேஷிடம் இவர் செய்யும் சேட்டைகள் வேற லெவலில் இருக்கும். அதுபோல பூவே உனக்காக காதல், கலாட்டா, சிரிப்பு, குடும்ப பின்னணி, காமெடி, காதல் தோல்வி என மொத்த கலவையாக இருக்கும்.
பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டுமல்லாமல் சங்கீதாவிற்கும் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து சங்கீதாவிற்கு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் பூவே உனக்காக சீரியல் கேமராமேனாக இருந்த சரவணன் என்பவரை சங்கீதா காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தற்போது புதியதாக திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில youtube சேனல்களில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அப்போது தனக்கு பூவே உனக்காக திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு வரும் போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது.
இரண்டும் ஒரே நேரத்தில் வந்ததால் எனக்கு எதை செலக்ட் செய்வது என்பது முதலில் குழப்பமாக இருந்தது ஆனாலும் நான் இயக்குனர் விக்ரமனுக்காக பூவே உனக்காக திரைப்படத்தை செலக்ட் செய்திருந்தேன். ஆனால் காதல் கோட்டை திரைப்படத்திலும் நான் நடிக்கவில்லையே என்பது எனக்கு வருத்தம் தான். அதோடு நடிகர் விஜய் அப்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரணால் நான் அழுது இருக்கிறேன்.. அம்மா, அப்பாவால முடியல.. நடிகை சங்கீதா ஓப்பன் டாக்
அவருடைய முயற்சியும் அவருடைய உழைப்பால் அவர் இன்றைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்று சங்கீதா பேசி இருக்கிறார். அதுபோல சங்கீதாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இதை பகிர்ந்து வரும் நிலையில் பூவே உனக்காக திரைப்படத்தில் பார்க்கும்போது சங்கீதா எப்படி இருந்தாரோ அப்படித்தான் இத்தனை வருடங்கள் கழித்த பிறகும் இருக்கிறார் என்று பலர் அவருடைய அழகை பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் நடிகைகள் என்றால் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மாயையை உடைத்த நடிகைகளில் சங்கீதாவும் ஒருவர். அப்போது போலவே இப்போதும் எளிமையின் உருவமாகவே அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதுபோல அந்த பேட்டியில் பூவே உனக்காக திரைப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தது. ஒன்று இப்போது இருப்பது.
இன்னொன்று விஜய் என்னை அக்சப்ட் பண்ணி கொண்டு இருவரும் ஒன்றாக இருப்பது போன்று ஒரு காட்சி இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் காட்சியை செலக்ட் செய்தது என்னுடைய கணவர் என்று பிறகு தான் எனக்கே தெரியும் என்று அந்த பேட்டியில் சங்கீதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications