நடிகர் ராஜ்கிரணால் நான் அழுது இருக்கிறேன்.. அம்மா, அப்பாவால முடியல.. நடிகை சங்கீதா ஓப்பன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்றான பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய்க்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

அதுபோல நடிகை சங்கீதா முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது பத்தாம் வகுப்பு தான் சங்கீதா படித்துக்கொண்டிருந்தார்.

Actress Sangeetha said that because of Rajkiran actions she sometimes cries

அப்போது ராஜ்கிரண் செய்த செயலால் தான் சில நேரங்களில் அழுது இருக்கிறேன் என்று நடிகை சங்கீதா பேசியிருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.

நடிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் பலருடைய மனதை கொள்ளை கொண்டு விட்டு தான் நடித்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்ததும் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். பல வருடங்களாக இவரை காணாமல் தேடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இப்போது முதல் முறையாக பிரபல youtube சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஒரு சில நடிகைகள் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார்கள். அதிகமாக ஆடம்பரமும் அழகு ஒப்பனைகளும் கவர்ச்சியான உடை அலங்காரமும் இல்லாமல் ஒரு சில நடிகைகள் தான் இருப்பார்கள். அவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி மரியாதை உண்டு. அந்த வரிசையில் வருவது தான் நடிகை சங்கீதாவும். சங்கீதா ஆரம்பத்தில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை நட்சத்திரமாக சில மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் சங்கீதாவிற்கு என் ரத்தத்தின் ரத்தமே என்கிற படத்தின் மூலமாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

சங்கீதா குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு திடீரென்று ராஜ்கிரண் நடிப்பில் வெளியான "எல்லாமே என் ராசா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது சங்கீதா பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தாராம். பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருக்கும் கதாநாயகனுக்கு ஜோடியாக ஒரு குழந்தை முகம் உள்ள ஒரு கதாநாயகி தேவை என்று இவரை செலக்ட் செய்து இருக்கிறார்கள்.

அப்போது நடந்த நிகழ்வுகள் குறித்து இப்போது நடிகை சங்கீதா மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் ராஜ்கிரண் சாரோடு நடித்ததை மறக்க முடியாது. அப்போ நான் பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தேன். எல்லாமே என் ராசா திரைப்படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருந்தனர்.

அதனால் எனக்கு தினமும் ராஜ்கிரண் சார் ஆபீஸில் இருந்து உணவுகள் வரும். அதை நான் கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும். ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் நாம சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டை கொஞ்சமாதான சாப்பிட முடியும். ஆனால் அவர்கள் கண்டிப்பா அதிகமா சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினாங்க அப்போ நான் பல நாள் அழுது இருக்கிறேன்.

Actress Sangeetha said that because of Rajkiran actions she sometimes cries

எங்க அம்மா அப்பா சொல்லிக் கூட நான் அவ்வளவு சாப்பிட்டது இல்ல. ஆனால் ராஜ்கிரண் சார் சொல்லி அனுப்பியதால் நான் அழுது கொண்டே பல நாள் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் கடைசியில் அந்த படம் என்னை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்த்தது, எனக்கு சந்தோஷம்தான் என்று அந்த பேட்டியில் நடிகை சங்கீதா பேசி இருக்கிறார்.

அத்தோடு எத்தனை வருடங்கள் ஆனாலும் 90ஸ் கிட்ஸ்களால் நடிகை சங்கீதா ராஜ்கிரண் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசா திரைப்படத்தை மறக்கவே முடியாது. அதுவும் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு சந்தன காட்டு, வீணைக்கு வீணை, அழகான மஞ்ச புறா என்ற பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் பாடல்கள் பிளே லிஸ்டில் இடம்பெற்று இருக்கும். அதிலும் ஒரு சந்தன காட்டுக்குள்ளே என்ற பாடலில் இடம் பெற்ற "என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடு இல்லையே" என்ற வார்த்தைகள் புதியதாக திருமணமான பெண்களின் whatsapp ஸ்டேட்டஸ்களில் தினமும் பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+