பூவே உனக்காக நடிகை "சங்கீதா” நினைவு இருக்கா? கணவர் இந்த பிரபலம் தானாம்.. வியக்க வைத்த "காதல்”
சென்னை: நடிகை சங்கீதா விஜய் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது காதல் திருமணம் செய்துவிட்டு சினிமாவை விட்டு விலகி இருக்கும் சங்கீதா பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார்.

பூவே உனக்காக திரைப்படத்தில் சங்கீதா நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரை காதலித்து திருமணம் செய்து தற்போது வரைக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதன் நிலையில் இவர்களுடைய காதல் வாழ்க்கையை பற்றி பார்க்கலாம்.
நடிகை சங்கீதா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் இவர் என் ரத்தத்தில் ரத்தமே, இதயவாசல் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். பாவாடை சட்டையோடு இவர் நடித்த பல படங்களில் இவருடைய முகம் அப்படியே கதாநாயகியாக மாறிய பிறகும் எளிமையாக கண்டுகொள்ளும் வகையில் தான் இருந்தது.
அந்த நேரத்தில் தான் சங்கீதாவிற்கு முதல் முதலாக கதாநாயகியாக நடிகர் ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் பலராலும் பேசப்பட்டது. காரணம் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவருடைய எதார்த்தமான முக அமைப்பு பலருக்கும் பிடித்திருந்தது. அதிலும் சுட்டித்தனமாக இவர் துருதுருவென நடித்திருப்பதும் அதிகமானோரை கவர்ந்திருந்தது.
எல்லாமே என் ராசா திரைப்படத்தில் ராஜ்கிரணிற்கு மனைவியாக நடித்து, அதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யோடு சேர்ந்து பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய கலகலப்பான கேரக்டர் அதிகமானவரால் பாராட்டப்பட்டது. அதே திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக சரவணன் என்பவர் வேலை பார்த்து இருக்கிறார்
அப்போதுதான் இருவருக்கும் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். ஆனாலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடம் இவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லையாம். பிறகு ஆஹா என்ற திரைப்படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சரவணன் அங்கே இருக்கும் போது அதே ஸ்டூடியோவில் வேறொரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சங்கீதாவை பார்த்திருக்கிறார்.

பிறகு இருவரும் சந்தித்து பேசி இருக்கின்றனர். அப்படித்தான் அவர்களுடைய காதல் மலர்ந்ததாம். ஒரு சில வருடங்கள் கழித்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். சங்கீதா கடந்த 2000ஆம் ஆண்டு சரவணனை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார். தற்போது அவருக்கு தேஜஸ்மி என்ற மகள் இருக்கிறார்.
அதுபோல சரவணன் சிம்பு நடித்த "சிலம்பாட்டம்" என்ற திரைப்படத்தை இயக்கிய போது தன்னுடைய கணவருக்கு உதவி இயக்குனராக சங்கீதா தான் இருந்தாராம். திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் அதாவது 14 வருடம் கழித்து ஒரே ஒரு மலையாள திரைப்படத்தில் மட்டும் சங்கீதா நடித்திருக்கிறார். தற்போது குடும்பம், குழந்தைகளோடு செட்டில் ஆகி இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications