சந்தோஷத்தில் சங்கீதா.. அதைவிடுஙக, ஆரஞ்சு பழ நடிகையாமே? இப்படியா இருப்பாங்க? அது யாரு சின்ன தளபதி:பிரபலம்
சென்னை: மார்க்கெட் இழந்த நடிகைகள், அக்கா கேரக்டரில் நடிப்பார்கள், அடுத்து, அண்ணியாக நடிப்பார்கள், அம்மாவாக நடிப்பார்கள், மாமியாராக நடிப்பார்கள், பாட்டியாகவும் நடிப்பார்கள்.. ஆக மொத்தம் இவர்களுக்கு நடிச்சிட்டே இருக்கணும், லைட், கேமரா, புரடக்ஷன், டைரக்டர், இந்த சத்தங்கள் எல்லாம் இவர்களுக்கு எப்போதும் கேட்டுட்டே இருக்கணும், அதனால்தான் எந்த வேடம் தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி விடுகிறார்கள் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. இவர் பல வருடங்களாகவே சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.. இந்நிலையில், 25 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளார். சின்ன தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் பரத் நடிப்பில் உருவாக உள்ள காளிதாஸ் 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க உள்ளாராம் நடிகை சங்கீதா.
ஊ சொல்றியா மாமா
ரிடையர் ஆன நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி Friday Facts என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், மார்க்கெட் இழந்த நடிகைகள் மீண்டும் நடிக்கத்தான் செய்வார்கள்.. தமன்னாவுக்கு மார்க்கெட் போச்சு.. காவாலா காவாலா ஆட வந்துட்டாங்க.. தமன்னாவை யாருமே ஹீரோயினாக போட்டு படம் எடுப்பதில்லை.. ஊ சொல்றியா மாமா என்று சமந்தா ஆடி, உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டார்.
சினிமா வாழ்க்கையை, சினிமாவின் போதையை அனுபவித்த யாராலும் அதை விட்டுக் கொடுக்க முடியாது. மார்க்கெட் போனாலும், மீண்டும் நடிக்கவே விரும்புவார்கள். வில்லி கேரக்டர்கள் தங்களுக்கு ஏதாவது தேடி வந்தால், முதலில் அதில் நடிக்க தயங்குவது போல காட்டிக் கொள்வார்கள். "என் பொண்ணு வில்லியாக நடிக்க மாட்டாள்.. இருந்தாலும், கதை வந்து சொல்லுங்க" என்று ஹீரோயின் அம்மாக்கள் சொல்வார்கள்.
அண்ணி, அம்மா, வில்லி, மாமியார், பாட்டி
அப்படியே கதை சொன்னாலும், உடனே ஏற்க மாட்டார்கள்.. "நான்தான் இதை செய்யணுமா? சினிமாவிலிருந்தே ஒதுங்கியிருக்கிறேன், நீங்க ஏன் என்னை இவ்வளவு கம்பெல் பண்றீங்க" என்று கேட்டுக்கொண்டே நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால், தங்கள் பணத்தையும் அதிகரித்து விடுவார்கள்.
முதலில் அக்கா கேரக்டரில் நடிப்பார்கள், அடுத்து, அண்ணியாக நடிப்பார்கள், அம்மாவாக நடிப்பார்கள், மாமியாராக நடிப்பார்கள், பாட்டியாகவும் நடிப்பார்கள்.. ஆக மொத்தம் இவர்களுக்கு நடிச்சிட்டே இருக்கணும், லைட், கேமரா, புரடக்ஷன், டைரக்டர், இந்த சத்தங்கள் எல்லாம் இவர்களுக்கு எப்போதும் கேட்டுட்டே இருக்கணும், அதனால்தான் எந்த வேடம் தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி விடுகிறார்கள்.
ஆரஞ்சு பழ நடிகை - கெத்து - மிரட்டல் தொனி
ஒரு நடிகையை இங்கு சொல்லியாகவேண்டும்.. விசு படத்தில் அழுது சென்ட்டிமென்ட்டாக நடிப்பார்.. ஆரஞ்சு பழத்தின் பெயரை கொண்டவர்.. தலையில் வெள்ளை விக்கு, நூல் புடவை, மஞ்சள் கயிறு, தேய்ந்து போன வளையல் போன்றவைகளுடன் பாட்டி வேடத்தில் உருக்கமாக நடித்து கொண்டிருப்பார்.
ஷாட் முடிந்த அடுத்த நிமிடமே அந்த நடிகையின் நடவடிக்கை "கெத்தாக" மாறிவிடும். பேமண்ட் தரலேன்னா நாளையிலிருந்து நடிக்கமாட்டேன் என்று அவரது குரலே மிரட்டலாக மாறிவிடும்.
மார்க்கெட் இழந்த நடிகைகள், இன்று நதியாவை பாட்டியாக நடிக்க சொன்னால் நடிக்க மாட்டார்கள்.. ஆனால், நதியா உட்பட ரம்யாகிருஷ்ணன், ராதிகா, ரேவதி, அம்பிகா, போன்றோர்கள் எல்லாம் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து இன்னமும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால், சிலர் மார்க்கெட் போய்விட்டதால், கும்பலில் வந்து நின்று நடிக்கும் சூழல் வரும்.. ஆனால், மேலும் சிலர், சினிமாவிலேயே இருக்க வேண்டும் என்ற போதைக்காக, நடிக்க வருவார்கள்.
தளபதி என்ற வார்த்தையையே கேவலப்படுத்திட்டாங்க
இப்போது சங்கீதா இளைய தளபதியுடன் நடிக்க வந்துள்ளார்.. முதல்ல இளைய தளபதியாக இருந்த விஜய், இப்போது தளபதியாகிவிட்டார்.. இவருக்கு பிறகு சின்ன தளபதி என்று பரத் வந்துள்ளார். எத்தனை படம் நடிச்சிருக்கார்? என்ன படம் நடிச்சிருக்கார் என்பதற்கு இந்த சின்ன தளபதி பட்டம்? (இந்த பட்டத்தை வேண்டாம் என்று பரத் ஏற்கனவே கூறியிருந்தார்)
ஒரு மிகப்பெரிய போரையே நடத்திக்கொண்டு செல்லும் வீரன்தான் தளபதி.. ஆனால், இந்த தளபதி பட்டத்தை யார் யாரு வைத்து கொள்வது என்றில்லையா?
விஜய்யாவது பரவாயில்லை, 35 வருடம் சினிமாவில் இருந்துட்டார், மார்க்கெட் உள்ள நடிகர்.. 250 கோடி சம்பளம் வாங்கும் வரை உயர்ந்துள்ளார்.. பரத்துக்கு எதுக்கு இப்போ சின்ன தளபதி? விஷால் புரட்சி தளபதி? இப்படி ஏகப்பட்ட தளபதிகள் வந்து, தளபதி என்ற வார்த்தையையே கேவலப்படுத்திட்டாங்க.." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications