வீட்ல விசேஷங்க.. மணக்கோலத்தில் கணவரோடு மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த சரண்யா.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா துரோடி தன்னுடைய கணவரோடு எடுத்த திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு 4வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் முடிவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் தொடங்கப் போகிறது என்றதும் இரண்டாவது பாகம் எடுபடுமா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

பல சீரியல்கள் முதல் சீசனில் வெற்றி அடைந்தாலும் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் போது எதிர்பார்த்த அளவிற்கு சுவாரசியம் இல்லாமல் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்த சீரியல் ரசிகர்கள் கேட்ட வகையில் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது.
அதுபோல இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். ஆனால் அந்த சீரியலில் இவர் நல்லவரா? கெட்டவரா? என்று யோசிக்க முடியாத வகையில் இருப்பவர் தான் தங்கமயில். தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் கதாநாயகியாக மாறி இருந்தார். முதல் சீரியலில் டாக்டராகவும் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாகவும் மாறிய சரண்யா அடுத்து நடித்த சீரியல்கள் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதனாலயே சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் விஜய் டிவியில் சரண்யா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இப்போது அவருக்கு என்று அதிகமான ரசிகர்களும் உருவாகிவிட்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்பது பலருடைய கேள்வியாக இருப்பது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் எப்போது பாண்டியனிடம் மாட்டுவார் அவர் பற்றிய உண்மைகள் குடும்பத்துக்கு தெரியும் போது என்ன நடக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சரண்யா நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு திருமணம் முடிந்தது பலருக்கும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதற்கு பிறகு மஞ்சள் கயிற்றோடு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று தன்னுடைய நான்காவது திருமண நாள் என்று கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் திருமண கோலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் முதல்மறையாக வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடத்திற்கு முன்பே சரண்யாவிற்கு திருமணம் ஆகி இருந்தாலும் எந்த இடத்திலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை இவர் பகிர்ந்து கொள்ளவில்லை. முதல் முறையாக தன்னுடைய திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். சரண்யாவிற்கும் அவருடைய கணவர் ராகுல் சுதர்சனுக்கும் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications