பாண்டியன் ஸ்டோர்ஸில் தங்கமயிலாக நடித்ததால் வருத்தப்பட்டேன்.. பலரின் நிலைமை இதுதான்! சரண்யா ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் தான் நடித்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது தனக்கு எதிராக ஆரம்பத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வரும்போது தான் ரொம்பவும் கஷ்டப்பட்டதாக பேசியிருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக பலருக்கும் பரீட்சையமான சரண்யா துரோடி நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலமாகத்தான் கதாநாயகியாக மாறினார். அதற்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில மாதங்களுக்குள்ளே முடிவுக்கு வந்துவிட்டது. இது அவரை மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.

அதனாலேயே இவர் அதிகமாக சீரியல் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இருந்தார். அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்தார். அதுபோல தன்னுடைய காதல் கணவரோடு சில புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருப்பார். இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் இவர் அறிமுகமானார்.
இந்த சீரியலில் இவர் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்று குழம்பி போகும் வகையில் தான் கேரக்டர் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலில் நகை மற்றும் படிப்பு விஷயத்தில் தங்கமயில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதுபோல வீட்டிற்குள் தான் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது.

அதனாலேயே இவரை இணையத்தில் அதிகமானோர் திட்டி வருகின்றனர். இது பற்றி சரண்யா சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் எடுத்த முடிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன். அந்த நேரத்தில் நான் ரொம்பவும் குழப்பமாக இருந்தேன். இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நாம நடிக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.
இதற்கு முன்பு நான் நடித்த கேரக்டர்கள் எல்லாமே போல்டான கேரக்டர். ஆனால் இந்த கேரக்டர் அப்படி கிடையாது என்பதால்தான் யோசித்தேன். பிறகு சரி என்று நடிக்க தொடங்கி விட்டேன். ஆனால் நான் நடிக்க வந்ததுமே இணையத்தில் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தது. அதை பார்த்து என்னுடைய அப்பா இந்த கேரக்டரில் நடிக்கணுமா? என்று கேட்டார்.
எனக்கும் நெகட்டிவ் கமெண்ட் பார்ப்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் கொஞ்ச நாள் போகட்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இது பற்றி என்னுடைய ப்ரொடக்ஷன் டீம்மிடமோ சேனல் தரப்பினிடமோ நான் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நாள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே நிலைமை இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது.
அதுபோல தங்கமயில் கேரக்டர் ஒன்றும் நெகட்டிவ் கிடையாது. அந்தப் பொண்ணுடைய வாழ்க்கை பலருடைய நிலைமை போல தான் இருக்கிறது. அந்த பொண்ணு படிக்கவில்லை ஆனால் பாண்டியன் குடும்பத்தில் படித்த பெண்ணுதான் வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் அந்த பொண்ணு பொய் சொல்லி இருக்கிறது.

அதுபோல நகையும் கிடையாது இவர்கள் கேட்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு வரதட்சணை கேட்பதால் வேறு வழி இல்லாமல் தான் கவரிங் நகையை போட்டு ஏமாற்றுகிறார்கள். பொதுவாக ஒரு பழமொழி சொல்வது உண்டு. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று, அதுபோல இவர்களுடைய கல்யாணத்திலும் சில பொய் இருக்கிறது.
அதில் நாம மாட்டி விடக்கூடாது என்பதற்காக தங்கமயில் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அவ்வளவுதான். இப்போது மக்களும் தங்க மயிலை புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். எனக்கு இது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்று அந்த பேட்டியில் சரண்யா துரோடி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications