நயன்தாரா யாருடன் பேசலையோ அவங்க நிஜமாவே கெட்டவங்க தான்! நானே பார்த்திருக்கிறேன்! சரண்யா பொன்வண்ணன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை நயன்தாரா குறித்து பல விஷயங்களை பற்றி தெரிவிக்கிறார். நயன்தாராவுடன் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் மற்றும் நயன்தாரா ஒருவரிடம் பேசவில்லை என்றால் அவர் கண்டிப்பாக கெட்டவராக தான் இருப்பார் என்றும் சரண்யா பொன்வண்ணன் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நடிகை நயன்தாராவுக்கு அறிமுகமே தேவை இல்லை. சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸ்யிலும் கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருடைய பயோபிக் வெளியான போது நடிகர் தனுஷ் தன்னுடைய திரைப்பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்கிறார் என்று நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Nayanthara Saranya Ponvannan

நட்பு உடைந்தது

தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவிற்கு காதல் ஏற்பட்டது. அதற்கு முன்பு தனுஷ்க்காக எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருந்தார். அந்த பாடலுக்கு சம்பளம் கூட வாங்கவில்லை என்று தனுஷ் மேடைகளில் பேசி இருக்கிறார்.

தனுஷுடன் பிரச்சனை

யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்த நயன்தாராவிற்கு அந்த நேரத்தில் நல்ல நட்பு இருந்தது. ஆனால் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தன்னுடைய பட்ஜெட்டை தாண்டி விக்னேஷ் சிவன் படம் எடுத்துவிட்டார் என்ற கோபத்தில் இருந்த தனுஷுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த பஞ்சாயத்தால் நயன்தாராவின் திருமணத்தில் கூட தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது.

சரண்யா பொன்வண்ணன் பேட்டி

இந்த நிலையில் தான் நயன்தாரா தன்னுடைய காதல் உருவான இடத்தைப் பற்றி தன்னுடைய பயோபிக்கில் பேசி இருந்தார். அது அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில நிமிட வீடியோக்களை பயன்படுத்தியதற்காக தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாராவுடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சரண்யா பொன்வண்ணன் நயன்தாரா குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.

Nayanthara Saranya Ponvannan

பேசாதவங்க கெட்டவங்க

அதில் அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் நயன்தாரா எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவங்கள எப்பவுமே என்னுடைய பொண்ணு என்று தான் நான் கூப்பிடுவேன். சினிமாவில் ஒரு நடிகையால் இவ்வளவு உயரத்திற்கு வருவது ஒன்றும் எளிமையான காரணம் கிடையாது. நிஜ வாழ்க்கைகயிலும் சரி, சினிமா வாழ்க்கையிலும் சரி பெண்களுக்கு ஒன்றும் அந்த அளவிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

வளர்ச்சிக்கு காரணம்

ஒரு சினிமா உருவாகிறது என்றால் ஒரு கதாநாயகனை சுற்றி எவ்வளவோ பில்டப் இருக்கும். அவருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் ஒரு கதாநாயகியையும், அவருடைய குடும்பத்தை பற்றியும் அந்த திரைப்படத்தில் பெரிய அளவில் காட்டப்படாது. இதை நீங்களே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்து நயன்தாரா இன்று இவ்வளவு வளர்ந்து இருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

Nayanthara Saranya Ponvannan

பேச மாட்டாங்க

அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் நான் நயன்தாராவை பலமுறை பார்த்து வியந்து இருக்கிறேன். அவங்க வெளியில சொல்ற மாதிரி நபர் கிடையாது. அவருக்கு துளி கூட அகங்காரம் கிடையாது. ஒரு நபரிடம் அவர் பேசவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நபர் கெட்டவராக தான் இருப்பார். கெட்டவங்கள் கூட தான் நயன்தாரா பேச மாட்டாங்க. அவங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

திமிரு கிடையாது

நயன்தாராவை பற்றி ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இதற்கு எதற்கு நம்ம ரியாக்ட் பண்ணனும் என்று தான் அவர் கண்டுகொள்ளாமல் போய்விடுவார். இதை சிலர் திமிரு என்று நினைக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கடந்து போகிறார் அவ்வளவுதான், என அந்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+