Saranya: பணம் முக்கியம் இல்ல! மாப்பிள்ளைக்கு இதுதான் தேவை! நெற்றி பொட்டில் அடித்தது போல பேசிய சரண்யா பொன்வண்ணன்
சென்னை: நடிகை சரண்யா மற்றும் பொன்வண்ணன் தம்பதியின் இரண்டாவது மகளான சாந்தினிக்கு சில நாட்களுக்கு முன்பு எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. இதில் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும், ஒரு பொண்ணு எப்படி மாப்பிள்ளையை தேர்வு செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய நடிகை சரண்யா நாயகன் திரைப்படத்தின் மூலம் கமலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகரும், இயக்குநருமான பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரண்யா பொன்வண்ணன் குடும்பம்
திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார் சரண்யா மற்றும் பொன்வண்ணன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால் இரண்டு மகள்களும் அவர்களுக்கு ஆசைப்பட்ட மாதிரியே டாக்டருக்கு படிக்க வைத்திருக்கிறார். பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அடி எடுத்து வைக்க தான் ஆசைப்படுவார்கள். ஆனால் சரண்யா தன்னுடைய மகள்கள் அவர்கள் ஆசைப்பட்ட மாதிரி டாக்டராக வேண்டும் என்று அப்போதே அவர்களை ப்ரீடமாக வளர்த்திருக்கிறார்.
மீண்டும் நடிப்பு
தன்னுடைய மகள்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த சரண்யாவிற்கு ராம் படம் பெரிய ஒரு வெற்றியை கொடுத்தது. அந்த படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஒரு கல்லூரி பேராசிரியராகவும், சிங்கிள் மதராகவும் ஒரு பையனை வளர்க்கும் கேரக்டரில் அவர் நடித்து பலரையும் வியக்க வைத்தார். அதற்கு பிறகு முன்னணி நடிகர்களுக்கு அம்மாவா அப்போ நம்ம சரண்யாவை கூப்பிடுங்கனு சொல்ற மாதிரி எல்லா நடிகர்களோடும் நடித்து விட்டார்.
சரண்யா மகள் எங்கேஜ்மென்ட்
இப்போதைக்கு அவர் ரஜினி கமலுக்கு மட்டும்தான் அம்மாவாக நடிக்கல என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் இவர்தான் அம்மாவாக வந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது போலவே கதையை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சரண்யாவின் இரண்டாவது மகளுக்கு குன்னூரில் வைத்து எளிமையான எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.
ஒரு ஓபன் கார்டனில் பூக்கள் அலங்காரத்தோடு இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டு எங்கேஜ்மென்டை முடித்து இருந்தனர். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து சரண்யா ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
சரண்யாவின் அட்வைஸ்
அப்போது பேசும்போது, ஒரு பெண்ணிடம் அவருடைய கணவரைப் பற்றி யாராவது கேட்டால் என்ன கேட்பார்கள்? உன்னுடைய கணவர் யார்? அவர் என்ன வேலை பார்க்கிறார்? எத்தனை மொழி தெரியும்? எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்பார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்து நாம கல்யாணம் பண்ணக்கூடாது. ஒரு பொண்ணு பையனை தேர்வு செய்கிறார் என்றார் அந்தப் பையன் எந்த இடத்திலும் அந்த பொண்ணை விட்டுக் கொடுக்கக் கூடாது.
பணம் இருந்தாலும் சரி, சொத்து இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, எதுவுமே நிலைக்க போறது கிடையாது. ஆனால் அந்த பையன் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறான், உன்னை எந்த இடத்திலும் தலைகுனிய வைக்காமல் இருப்பானா? யாரிடமும் உன்னை அசிங்கப்படுத்த கூடாது, உனக்கு ஒரு துணையாக இருக்க வேண்டும். அதுபோல ஒரு மாப்பிள்ளை தேர்வு செய்யணும் என்று தான் நான் சொல்வேன்.
என்னுடைய பொண்ணுங்க கிட்டயும் நான் அதைத்தான் சொல்லி இருக்கிறேன். காசு பணம் முக்கியம் என்று பார்த்தால் எந்த பெண்ணாலும் நிம்மதியாக வாழ முடியாது என்று சரண்யா அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதை இப்போதைய தலைமுறை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் புரிந்து கொண்டால் நல்லது என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications